பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(3. விஷ்ணு T) இப்புராணம் பற்றி. பதினெண் புராணங்களுள் இப்புராணம் மிகவும் முக்கியமானதென்று வைணவர்கள் கூறுவர். இந்தப் புராணத்திலும், பின்னர் வரும் பாகவத புராணத்திலும் பூரீகிருஷ்ணன் வரலாறு மிக விரிவாகப் பேசப் படுகிறது. ஆதிசங்கர பகவத் பாதாள் தம்முடைய மஹாபாஷ்யத்தில் விஷ்ணு புராணத்தில் இருந்து பல மேற்கோள்களை எடுத்துக் காட்டுகிறார். ஆதி சங்கரர் காலம் 8ஆம் நூற்றாண்டு என்பது ஆய்வாளர்கள் கண்ட முடிவாகும். எனவே இந்தப் புராணம் அவரது காலத்துக்கு முன்னரே அதாவது 5, 6ஆம் நூற்றாண்டு களில் மக்களிடையே நன்கு பரவி இருக்க வேண்டும். 5, 6ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது என்ற காரணத்தால் இந்திய நாகரிகம், பண்பாடு என்பவற்றின் கருவூலம் இப்புராணங்கள் என்ற கருத்துக்குத் தடை ஏதுமில்லை. இப்பொழுது கிடைக்கின்ற முறையில் இப்புராணம் 6,000 பாடல்களைக் கொண்டதாகும். இப்புராணம் வியாச பகவானின் மகனாகிய பராசர முனிவரால் சொல்லப்பட்டதாகும். மைத்ரேயி முனிவர் பராசர முனிவரிடம் பாரத நாட்டுத் தோற்றம் பற்றிக் கேட்க,