பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 பதினெண் புராணங்கள் உதவி செய்வதை நிறுத்திக் கொண்டார். என்றாலும் இவர் ஏற்கெனவே படைத்துவிட்ட பதினோரு சிரஞ்சீவி களும் ஏகாதச ருத்திரர்கள் என்ற பெயரில் நிலைத்து விட்டனர். இதனை அடுத்து பிரம்மன் சனகன், சனந்தா, சனாதன ஆகிய மூன்று மகன்களையும் பெற்றார் என்று இப்புராணம் கூறுகிறது. (சனத்குமாரன் என்ற நான்காவது பிள்ளையையும் பெற்றான் என்பதை மற்ற புராணங்கள் சொல்லுகின்றன) இதன் பிறகு ஒன்பது முனிவர்கள், சுயம்பு மனு ஆகியவரின் தோற்றம் பற்றி ஏனைய புராணங்கள் போலவே இலிங்க புராணமும் பேசுகிறது. யோகம் யோகத்தின் இயல்பு, அதன் இலக்கணம், பயிற்சி முறை ஆகியவற்றை ஏனைய புராணங்களைப் போலவே இலிங்க புராணமும் கூறுகிறது. சிவனுக்குப் பசுபதி என்ற பெயர் உண்டு என்பதும், சிவன் கற்பித்த முறையில் யோகத்தைப் பயில்வது பாசுபத யோகம் எனப்படும். ஒவ்வொரு கல்பத் திலும் இந்த யோகத்தைக் கற்பிப்பதற்காக சிவன் யோகேஸ் வரன் என்ற பெயரில் வடிவெடுக்கிறார். இதுவரை நடை பெற்ற 28 கல்பங்களில் ஒவ்வொரு கல்பத்திற்கும் சுவேதா யோகேஸ்வரா, சுதார யோகேஸ்வரா, மதன யோகேஸ்வரா என்ற வெவ்வேறு பெயர்களுடன் சிவன் வடிவெடுக் கிறார். ஒவ்வொரு முறை இவர் வடிவெடுக்கும் பொழுதும் இவருக்கு நான்கு சீடர்கள் உள்ளனர். ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்தில் உள்ள துவாபரயுகத்தில் வேத வியாசர் என்ற பெயருடன் சிவன் வடிவெடுக்கிறார். 28 வேத வியாசர்களுள் சில பெயர்கள் வருமாறு:- சத்யா, பார்கவா, கிராது, அங்கீரா, வசிஷ்டா, அருணி ஆகியவை ஆகும்.