பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 105 சகர மன்னன் கதை மாந்தாதாவின் பரம்பரையில் வந்தவன் புருட்சா என்ற அரசன். அவன் காலத்தில் நாகலோகத்தில் வசிக்கும் நாகர்களின் மாணிக்கங்களைத் திருடுவதற்காக கந்தர்வர்கள் நாகலோகத்திற்குள் புகுந்து முற்றுகையிட்டனர். கந்தர்வர்களை எதிர்க்க முடியாத நாகர்கள் விஷ்ணுவை வேண்டிக் கொண்டனர். விஷ்ணு அவர்கள் முன் தோன்றி 'உலகை புகுந்து கொண்டு கந்தர்வர்களை அழிக்கிறேன்' என்று கூறினார். நாகர்கள் நர்மதா என்ற பெண்ணை புருட்சாவிடம் அனுப்பினர். அவள் சென்று புருட்சாவை நாகலோகத்திற்கு அழைத்து வந்து விட்டாள். புருட்சாவின் உடலில் புகுந்து இருந்த விஷ்ணுவின் உதவியால் கந்தர்வர்கள் தோற்கடிக்கப் பட்டனர். புருட்சாவை அழைத்துக் கொண்டு வந்ததற்காக நாகர்கள் நர்மதாவிற்கு நன்றி பாராட்டினர். மேலும் அவளை காலை, மாலை வணங்குபவர்களை விஷம் தீண்டாது, பாம்புகளும் கடிக்காது என்ற வரத்தைப் பெற்றனர். அந்தப் பரம்பரையில் வந்தவன் பகு என்ற மன்னன். அவன் மைந்தன் சகரன் ஆவான். பெருவலி படைத்தவனாகிய சகரன் உலகம் முழுவதையும் ஆண்டு ஒர் அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினான். அவன் இரு மனைவிகளுள் ஒருத்திக்கு ஒரு மகனும், மற்றொருத்திக்கு அறுபதினாயிரம் மக்களும் பிறந்தனர். இவர்கள் அனைவருமே தீயவர்களாக இருந்தனர். இந்த நிலையில் அஸ்வமேத யாகத்தின் குதிரையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சகர மன்னன் இப்பிள்ளைகளிடம் ஒப்படைத்தான். குதிரை இங்குமங்கும் அலைய, மக்கள் அதன் பின்னே சென்றனர். திடீரென்று குதிரை காணாமல் போய்விட, தேடிச் சென்ற பிள்ளைகள் கீழுலகிற்குக் குதிரை