பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பதினெண் புராணங்கள் அசுரனை உள்ளே விட்டு விட்டார். நந்தி தன் கடமைகளைச் சரியாகச் செய்யாததால் 12 ஆண்டுகள் பூமியில் நரியாகப் பிறக்குமாறு பார்வதி சாபமிட்டார். அந்தச் சாபத்தால் நரியான நந்தி இப்பொழுது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவபூசை செய்து வந்தது. அந்த நரியின் செயலை அடிக்கடி பார்த்து வந்த அரசன் தாரபாலா சாப முடிவில், நரி ஜோதி வடிவுடன் சிவனிடம் செல்வதைப் பார்த்தான். சிவபூசை சிறப்பை அறிந்த தாரபாலா, தானும் தீவிரமாக சிவபூசை செய்ய ஒரு கோயிலைக் கட்டி அங்கே புராணப் பிரசங்கங்கள் நிகழ ஏற்பாடு செய்தான். அந்தப் புண்ணிய பலத்தால் இப்போது பிரம்ம லோகம் செல்கிறான். பயங்கரமான உலோபியாக வாழ்ந்தவன், ஒருமுறை புராணப் பிரசங்கத்தைக் கேட்டு முழுவதும் மாறிவிட்டான். பல இடங்களில் பலரை ஏற்பாடு செய்து ஆங்காங்கே புராணப் பிரசங்கங்கள் நடக்குமாறு செய்தான். தன் செல்வத்தை எல்லாம் அதற்கே செலவிட்டான். புராணத்தைக் கேட்டதாலும், புராணப் பிரசங்கத்தைப் பிறர் கேட்கச் செய்வதாலும் ஏற்பட்ட புண்ணியத்தால் அவன் இப்பொழுது பிரம்ம லோகம் போகிறான். புராணங்களின் பயன் இது. புராணத்தைக் கேட்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களை வழிபடுவது போலாகும் என்று கதையை முடித்தான், யமன். சதநிகாவும், சகஸ்ரநிகாவும் மன்னன் சதநிகா தினந்தோறும் பிராமணர்களுக்கு தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்து நூற்றுக்கணக்கான பொற்காசுகளை தானம் செய்தான். இறுதியில் அவன் இறந்து விடவே மகன் சகஸ்ரநிகா பட்டத்துக்கு வந்தான். அவன் தகப்பனைப் போல தானம் செய்வதை நிறுத்தி விட்டான். வருமானத்தை இழந்த