பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரத புராணம் 263 புறப்பட்டவுடன் கங்காதேவியும் ஒரு பெண் வடிவு கொண்டு அவன் பின்னேயே சென்றாள். தன் மூதாதையர்கள் எரிந்து சாம்பலான இடத்தை அடைந்தான். அந்தச் சாம்பல் மேல் கங்கை பொங்கிப் பாயவே சகரர்கள் நரகிலிருந்து விடுபட்டுச் சுவர்க்கம் சென்றார்கள். - விரதங்கள் நாரத புராணம் பின்வரும் விரதங்கள் பற்றி விரிவாகக் கூறுகிறது. ஏகாதசி விரதம் மாதத்தில் சுக்கிலபட்சத்தில் ஏகாதசி திதி அன்று அனுஷ்டிக்கப்படுவது. இரவு முழுவதும் கண் விழித்திருந்து, காலையில் சாளக்கிரமத்திற்குப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். எள்ளை அக்னியில் போடுவதுடன், நல்ல ஆகாரம் தயார் செய்து விஷ்ணுவிற்கும், லக்ஷ்மிக்கும் நிவேதனம் செய்து விஷ்ணு பக்தர்களுக்கு விருந்து செய்ய வேண்டும். துவாதசி அன்றும் இதனையே செய்ய வேண்டும். பல யாகங்கள் செய்வதைக் காட்டிலும் இந்த விரதங்களை மேற்கொள்வதால் அதிகமான புண்ணியம் கிடைக்கும். பெளர்ணமி விரதம் பிராமணர் முதலிய நான்கு வர்ணத்தாரும், பெண்களும் கூட மேற்கொள்ளுகின்ற விரதமாகும். பெளர்ணமி அன்று செய்யப்படுவதால் இது பெளர்ணமி விரதம் என்று சொல்லப் படும். இந்தப் பெளர்ணமி விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கப்படலாம். பன்னிரண்டு மாதங்களிலும் விரதம் இருந்து, கார்த்திகை மாதத்தில் இது முடிக்கப்படும் போது விஷ்ணுவிற்கும், லட்சுமிக்கும் பிரசாதங்கள் படைத்து வழிபடு வதால் இது லஷ்மி நாராயண விரதம்" என்று சொல்லப்படும்