பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 303 போகலாம் என்றான். அரசகுமாரன் தந்தையிடம் வந்த பொழுதுதான் நடந்தது தெரிந்தது. மனமொடிந்த அரச குமாரன் மனைவியை நினைத்தே உருகலானான். நாக மன்னன் தந்த பரிசு நாகலோக அரசனாகிய அஸ்வதாரா, தன் பிள்ளைகள் மூலம் அரசகுமாரன் கதையினைக் கேள்விப்பட்டு இமயம் சென்று சரஸ்வதியை நோக்கித் தவம் செய்தான். சரஸ்வதி வெளிப்பட்டதும், உலகில் ஈடு இணையற்ற பாடகனாகத் தான் ஆகவேண்டும் என்று வரம் கேட்டான். அந்த வரத்தைப் பெற்றுக் கொண்டு கைலயங்கிரிக்குச் சென்று சிவன் காதில் படும்படியாக அற்புதமாகப் பாடினான். மகிழ்ந்த சிவன், “உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்க, "ஐயனே! இறந்து போன மதலசா எனக்கு மகளாக வரவேண்டும். அது குழந்தையாகப் பிறந்து வளராமல், அவள் இறக்கும் பொழுது, எந்த வயதுடன் எவ்வளவு அழகுடன் இருந்தாளோ அப்படியே என் மகளாகப் பிறக்க வேண்டும்” என்று வரம் கேட்டான். அப்படியே ஆகட்டும் என்று சிவன் சொல்ல, நாக மன்னனாகிய அஸ்வதாரா உண்மையில் பல தலைகள்ை' (படங்கள்) உடைய நாகம் ஆதலால், ஒரு படத்தில் இருந்து மதலசா வந்தாள். அவளை அழைத்து வந்த அஸ்வதாரா, தன் பிள்ளைகளுக்குக் கூட அவள் வருகையை அறிவிக்க வில்லை. தன் பிள்ளைகளை அழைத்து, "இத்தனை முறை பூலோகம் சென்று ரிதத்துவஜாவுடன் பொழுதைக் கழிக்கிறீர்களே. ஒருமுறை அவனை இங்கு அழைத்து வாருங்கள்” என்றான். பிராமண வடிவுடன் அந்தப் பிள்ளைகள் ரிதத்துவஜாவுடன் இருப்பது வழக்கம். அதே வடிவுடன் சென்று அவனைத் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். பின் மூவருமாக அங்கே வந்தனர். நண்பர்கள்