பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 பதினெண் புராணங்கள் மன்னன் இவ்வளவு சிறந்த புண்ணிய rேத்திரத்தை விட்டுப் போக மனமில்லாமல் மகனிடம் ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிட்டு மலையிலேயே தங்கிவிட்டான். தங்கியதோடு மட்டுமல்லாமல் தினமும் மலையைச் சுற்றி வந்தான். மரம், செடி கொடிகளில்லாத அப்பகுதியில் நிறைய மரம் வளர்ந்தது. குளம் வெட்டிப் பல நன்மைகள் செய்தான். மூன்றாண்டுகள் கழிந்த பிறகு சிவன் அம்மன்னன் முன் தோன்றி உன்னுடைய சாபம் தீர்ந்துவிட்டது. நீ இந்திரன். இந்திரனாக இருந்தபொழுது என்னை மதிக்காமல் அகங்காரத்தோடு நடந்து கொண்டதால் இந்த மானுடப் பிறப்பை அடைந்தாய். இப்பொழுது நீ செய்த சிவபுண்ணியத்தால் உன் சாபம் நீங்கிவிட்டது. இந்திரலோகம் சென்று இந்திரப் பதவியை மேற்கொள்ளலாம் என்றார். மார்க்கண்டேய முனிவரிடம் இக்கதையைக் கூறிய நந்தி, அருணாசல மலையின் சிறப்பைப் பற்றிக் கூறலானார். அந்த மலை முழுவதும் சிவனுடைய ஸ்தூல வடிவமாகும். அந்த மலை வலம் வருதல் எங்கும் நிறைந்துள்ள சிவனை வலம் வருவதற்கு ஒப்பாகும். இது எப்படி நிகழ்ந்தது என்பதை நான் சொல்கிறேன். ஒருமுறை சிவனிடத்தில் ஓர் அற்புதமான கனி யாரோ கொடுத்திருந்தார்கள். கணேசன், ஸ்கந்தன் ஆகிய இரு பிள்ளைகளும் தந்தையிடம் வந்து அப்பழத்தைக் கேட்க சிவன் ஒரு சோதனை வைத்தான். "உங்கள் இருவரில் யார் உலகம் முழுவதையும் முதலில் சுற்றி வருகிறீர்களோ அவர்களுக்கே இப்பழம் உரியது” என்றார். ஸ்கந்தன் உலகைச் சுற்றி வரப் புறப்பட்டான். ஆனால் கணேசர் அருணாசல மலையைச் சுற்றி வந்தால் உலகைச் சுற்றி வந்ததற்கு ஒப்பாகும் என்று கூறி அம்மலையைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார். அருணாசலத்திற்குச் சோணாசலம் என்ற பெயரும் உண்டு.