பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 541 கோபத்துடன் சிவன் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். தேவர்கள் மன்மதன் எரிந்ததைக் கண்டு 'ஓ'வென்று கதறினர். இமவான் வந்து தன் மகளை அழைத்துச் செல்ல விரும்பிய போது, பார்வதி மறுத்து விட்டாள். சிவன் இருந்த பர்ண சாலையிலேயே கடுந்தவம் புரிய ஆரம்பித்தாள். எட்டு வயதுச் சிறுமியாக இருந்தும், பச்சை இலைகளைத் தின்றும், பிறகு காய்ந்த இலைகளைத் தின்றும் அதன்பிறகு அந்த இலைகளைக் கூடத் தின்னாமல் விரதம் அனுஷ்டிக்கத் தொடங்கினாள். அதனால் அவளுக்கு அபர்ணா” என்ற பெயர் வந்தது. பார்வதியின் தவத்தை மெச்சிய சிவன் அவளை மணந்து கொள்ள முடிவு செய்தாலும், அவளைச் சற்று சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தார். அதனால் தன் வடிவை மாற்றிக் கொண்டு மாறு வேடத்தில் பார்வதி எதிரே வந்து, சிவனை ஏன் மணக்க நினைக்கிறாய். அவன் அறியாமை நிறைந்த பயித்தியக்காரன், எப்பொழுதும் சாம்பலைப் பூசிக் கொண்டு சுடுகாட்டில் திரிபவன். அவன் அணிந்திருக்கும் மாலை மயான மண்டை ஒடுகள். சுற்றி இருப்பவை அலறும் பிசாசுகள். இதைக் கேட்ட பார்வதி, தாட்சாயணியைப் போல் கோபம் கொண்டு எதிரிலே நிற்பவனைப் பார்த்து, “உம் சொற்களை நான் கேட்கத் தயாரில்லை. இங்கிருந்து போய் விடு” என்றாள். இந்த வார்த்தைகளை அவள் பேசியவுடன் சிவன் தன் உண்மையான சொரூபத்துடன் எதிரிலே நிற்கவும், பார்வதி அளவற்ற நாணத்துடன் அவரிடம் ஒரு வரம் வேண்டினாள். சென்ற பிறப்பில் நான் தாட்சாயணியாக இருக்கும் பொழுது தாங்கள் தானே என் கணவர். இந்தப் பிறப்பிலும் நான் தங்கள் மனைவியாக இருக்க விரும்புகிறேன். தங்களை மணந்து பிறக்கப் போகும் குழந்தை தாரகாசுரனை வெல்லும் குழந்தையாகவே எண்ணி மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். சிவன் அதற்கு