பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 583 ஒருமுறை ஆறு மாதம் வரை ஒருவரும் பிச்சை போட முன்வரவில்லை என்றவுடன் மிகவும் கோபம் கொண்ட வேதவியாசர் அந்த நகரத்து மக்களைச் சபித்துவிட எண்ணினார். அந்த நேரத்தில் சிவனும் பார்வதியும் ஒரு கணவனும் மனைவியுமாக வேதவியாசர் முன்னே தோன்றி அவரைத் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்து வயிறு நிரம்ப உணவளித்தனர். உண்ட பிறகு சிவன் வேதவியாசர் முன் தோன்றி, கோபத்தை அடக்கும் சக்தி உனக்கு இன்னும் வரவில்லை. ஆகவே காசியில் நிரந்தரமாகத் தங்கும் தகுதி உனக்கு இல்லை” என்று கூறினார். அதைக் கேட்ட வேத வியாசர் சிவனைப் பார்த்து அத்தகுதி தனக்கு இல்லை என்றாலும் சுக்கிலபட்சத்தில் எட்டு, (அஷ்டமி) பதினாலு (சதுர்த்தசி) ஆகிய இரண்டு நாட்களிலும் உள்ளே வர அனுமதி வேண்டினார். "அப்படியே ஆகட்டும்' என்று கூறிவிட்டு மறைந்தார். காசி தோன்றிய கதை காசி தலம் விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டதாகும். அதற்குரிய கதை வருமாறு: சிவனுக்குக் கல்யாணம் நடந்து முடிந்த பிறகு பார்வதி கணவனுடன் தன் பிறந்த வீடாகிய இமாசலத்தில் தங்கி விட்டார். சிவனும் மாமனார் வீட்டில் தங்கி மகிழ்ச்சியாக இருந்து விட்டார். பார்வதியின் தாயாகிய மேனாவிற்கு மருமகன் வீட்டோடு தங்கியிருப்பது பிடிக்கவில்லை. மகளிடம் ஓயாது அதுபற்றி குத்திக்காட்டிக் கொண்டே இருந்தாள். “இந்த மாப்பிள்ளையிடம் எதைப் பார்த்து ஆசைப்பட்டாய். நீ? இளமையோ, அழகோ இல்லாத இவனிடம் நீ ஏன் ஆசை வைத்தாய்?’ என்று அடிக்கடி கேட்டுத் துன்புறுத்தினாள். “உன்னுடைய கணவன் உனக்கு ஒரு நகைகூடப் போடவில்லை.