பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 பதினெண் புராணங்கள் விஷ்ணுவின் விதவிதமான சிலைகள், வேறுபட்ட வடிவங்களைக் கொண்டவை. உதாரணமாக, விஷ்ணுவின் பத்து அவதாரங்களைச் சிலையாக வடிக்கும்பொழுது, மச்ச அவதாரத்தில், மச்சம் ஒரு மீனைப் போலவே இருக்க வேண்டும். கூர்ம அவதாரத்தில் கூர்மம் ஒர் ஆமை போலவும் இருக்க வேண்டும். ஆனால் வராக அவதாரத்தில், வராகத்திற்கு நான்கு கைகளும், அவற்றில் முறையே கதாயுதம், தாமரை, சங்கு, சக்கரம் ஆகியவை இருக்க வேண்டும். நரசிம்ம அவதாரத்தில் இரண்டு கைகளும், அவற்றில் சக்கரமும் கதாயுதமும் இருக்க வேண்டும். அவர் கழுத்தில் ஒரு மாலை அணிந்திருக்க வேண்டும். வாமன அவதாரத்தில் இரண்டு கைகளிலும் முறையே குடையும், குச்சியும் இருக்க வேண்டும். பரசுராம அவதாரத்தில் நான்கு கைகளும், அவற்றில் வில், அம்பு, வாள். கோடரி ஆகியவை இருக்க வேண்டும். இராமன் சிலைக்கு இரண்டு அல்லது நான்கு கைகளுடன் வடிக்கப் படலாம். நான்கு கைகளுடன் வடித்தால், முறையே அம்பு, வில், சங்கு, சக்கரம் இருக்க வேண்டும். பலராமன் சிலை நான்கு அல்லது இரண்டு கைகளுடன் இருக்க வேண்டும். நான்கு கைகளானால் கலப்பை, கதாயுதம், சங்கு, சக்கரம் ஆகிவற்றுடன் வடிக்க வேண்டும். கல்கி அவதாரமாயின், ஒரு பிராமணன் குதிரைமேல் அமர்ந்திருப்பது போலவும், கையில் வில், அம்பு, சங்கு வாள், சக்கரம் ஆகியவற்றை வைத்திருப்பது போலவும் வடிக்க வேண்டும். கிருஷ்ணனின் சிலை இரண்டு அல்லது நான்கு கைகளுடன் இருக்க வேண்டும். அவற்றில் முறையே கதாயுதம், சக்கரம், சங்கு ஆகியவை மூன்று கைகளிலும், நான்காவது கை வரத முத்திரையுடன் கீழ்நோக்கித் திறந்திருக்க வேண்டும். கிருஷ்ணனின் இருபுறங்களிலும் பிரம்மன், சிவன் ஆகியோரின் சிலை வடிக்கப்பட வேண்டும். பிரம்மனுக்கு நான்கு முகமும், நான்கு கைகளும், முன்பக்கம்