பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

кіх எதிர்காலத்தை உணர்த்துவது என்ற பொருளும் உண்டு. ஆதலால் இடைச் செறுகல்காரர்கள் தங்கள் கைவரிசை யைக் காட்ட இப்புராணத்தைத் தேர்ந்தெடுத்தனர். பல புராணங்கள் குப்த பரம்பரையோடு முடிய, இப்புராணம் முகமதியர் படையெடுப்பைக் கூறுவதுடன் முகமதுகோரி, தீமூர் என்பவர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. முகமதிய அரசர் பற்றியும் அவர்கள் படையெடுப்புப் பற்றியும் இப் புராணத்தில் பாடிச் சேர்த்ததன் உள்நோக்கம் எளிதில் புரிந்து கொள்ளலாம். வெளிநாட்டிலிருந்து இடைக் காலத்தில் புகுந்த முகமதியர் படையெடுப்பு நியாயமானது. ஏற்கெனவே புராணத்தில் கூறப்பட்டுள்ளது என்ற எண்ணத்தை மக்கள் மனத்தில் உண்டாக்குவதற்கேயாம். இதனையடுத்து விவிலியத்திற் காணப்படும் ஆதாம் ஏவாள் கதை, இயேசுவின் வரலாறு என்பவற்றில் தொடங்கி, விக்டோரியா மகாராணியின் வரலாறு வரை பவிஷ்ய புராணத்தில் இடம்பெறுவது வியப்பைத் தருவ தாகும். இடைக் காலத்திலிருந்த முகமதியர்களும், பிற் காலத்தில் வந்த கிறிஸ்தவர்களும் தங்கள் படையெடுப்பை நியாயப்படுத்திக் கொள்ளச் செய்த பல்வேறு சூழ்ச்சி களில் இதுவும் ஒன்றாகும். புராணங்களைப் போலவே வடமொழியில் பாடல்கள் இயற்றவல்ல பிராமணர்கள் முகமதிய, கிறிஸ்தவர்கள் தந்த பொருளுக்காக அவர்களைச் சிறப்பித்துப் பாடி அதை பவிஷ்ய புராணத்திலும் சேர்க்கக் கூடிய அளவிற்குத் துணிந்துவிட்டமையின் புராணங்களும் மதிப்பை இழக்க லாயின. இப்புராணங்களில் ஒவ்வொருவருடைய ஆயுள், ஆண்ட காலம், சிலர் தவம் இயற்றிய காலம் என்பவற்றைப் பார்க்கும் பொழுது ஒரு மலைப்புத் தோன்றும். ஆயிரம் ஆண்டுகள், பத்தாயிரம் ஆண்டுகள், பதினாறாயிரம்