பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 பதினெண் புராணங்கள் அதையறிந்த அரக்கன் துந்து படைத்தலைவனிடம் பிரம்ம லோகம் அடைந்து தேவர்களைத் துரத்தித் தங்க இடமின்றிச் செய்ய வேண்டும் என்றான். பிரம்மலோகம் செல்லும் வழியில் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்கள் பற்றி அவர்கள் எடுத்துரைத்தனர். அரக்கன் சுக்கிராச்சாரியாரை அடைந்து, பிரம்மலோகம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அவர், இந்திரன் நூறு அசுவமேத யாகங்கள் செய்து அந்தச் சக்தியை அடைந்தான் என்றார். உடனே துந்துவும் நூறு அசுவமேத யாகங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டான். அப்படியானால் ஒரே நேரத்தில் நூறு அசுவமேத யாகங்களைச் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்றான் துந்து. அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறும் செய்தி சத்யலோகத்தை எட்டவே, தேவர்கள் அஞ்சி நடுங்கினர். பிரம்மனிடம் சென்று முறையிட, பிரம்மன் துந்துவின் வரபலம் அறிந்தவர் ஆதலால் அவனைக் கொல்ல முடியாது, எல்லோரும் சென்று விஷ்ணுவிடம் முறையிட்டால் ஏதாவது வழி பிறக்கும் என்று கூறினார். அனைவரும் விஷ்ணுவிடம் சென்றனர். அவர்கள் குறை கேட்ட விஷ்ணு அஞ்ச வேண்டாம். துந்துவைக் கொல்ல முடியாது என்றாலும், அடக்கி வைக்கிறேன்’ என்றார். அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, குள்ளன் வடிவத்தில் ஒரு இளைஞன் தோன்றினான். அதைக் கண்ட அசுரர்கள் ஒடிச் சென்று அவனைக் காப்பாற்றி துந்துவின் எதிரிலே நிறுத்தினர். துந்து, குள்ளனைப் பார்த்து 'உனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? என்றான். வாமனன் (குள்ளன்) தன் கதையைச் சொல்லத் தொடங்கினான்: “பிரபசா என்ற பிராமணனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நேத்ரபாசா, கதிபாசா என்றும்