பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 பதினெண் புராணங்கள் என்றொரு இடத்தை விஷ்ணு கொடுத்து விட்டார். உத்தானபாதாவின் வழியில் வந்தனாகிய சருக்ஷா, ஆறாவது மனுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டான். இவனது பரம்பரையில் தோன்றியவர்களே எவனா, அவன் மகன் பிருத்து ஆகியோர். பிருத்துவின் மகன் சிகண்டி சிகண்டியின் மகன் சுசிலா. சுசிலா வேதங்களை நன்கு படித்து, புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்றான். இறுதியாக இமயமலைக்கு வந்து சேர்ந்தான். மந்தாகினி நதிக்கரையில் அழகிய ஆசிரமம் அமைத்து, சிவனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தான். அவ்வாறு சுசிலா தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது, சுவேதாஸ்வதா என்ற முனிவர் அங்கு வந்தார். அந்த முனிவர் உடம்பில் சாம்பலைப் பூசிக் கொண்டு, மிக மெலிந்த உருவமாகக் காட்சி அளித்தார். தன்னுடைய தவத்தை முடித்துக் கொண்டு சுசிலா, கண்விழித்து முனிவரைப் பார்த்தான். அவரை வணங்கி, "ஐயனே! நான் பெரும் பேறு பெற்றவன் ஆகையால் உங்களை இங்கு தரிசிக்க முடிந்தது. என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக் கொண்டு, நான் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் எனக்குக் கற்றுத்தர வேண்டும்’ என்று வேண்டினான். சுவேதாஸ்வதா முனிவரும் சம்மதித்து, சாத்திரங்கள் பற்றிய ஞானத்தை போதிக்க ஆரம்பித்தார். சுசிலாவின் தந்தையான சிகண்டிக்கு ஹவித்தன் என்று ஒரு சகோதரன் இருந்தான். அவனுடைய மகனே பிரசினவர்ஹி என்பவன். இவன் கடலரசன் மகள் சவர்ணாவை மணந்து, பத்துப் புதல்வர்களைப் பெற்றான். இந்தப் புதல்வர்களே பிரசேதாஸ் என்று பெயர் பெற்றனர். இவர்கள் விஷ்ணுவிடம் அன்பு கொண்டு, அவரையே வணங்கி வந்தனர். பத்து பிரசேதர்களும் மணம் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு மாரீசன், தட்சன் என்ற புதல்வர்கள் பிறந்தனர். இந்த தட்சனே, முன்பு பிரம்மனின் மகனாகத் தோன்றியவன். தட்சன் சிவனுடன்