பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 பதினெண் புராணங்கள் புருஷோத்தம கூேடித்திரம் பூரி ஜெகன்னாதர் ஆலயத்தை இந்திரத்துய்மன் என்ற மன்னன் நிறுவியது பற்றி விஷ்ணு புராணத்தில் முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் வளர்ந்துள்ள மரத்தை வெட்டி எடுத்து, சிலைகள் செய்க என்று இந்திரத்துய்மன் கனவில் கண்டதாகவும், மறுநாள் மரத்தை வெட்டப் போகும் போது விஷ்ணுவும், விஸ்வகர்மாவும் பிராமணன் வடிவில் வந்து சிலைகளைச் செய்ததாகவும் விஷ்ணு புராணக் கதை சொல்லிச் செல்கிறது. அந்தக் கதை, மரத்தை வெட்டுவதி லிருந்து ஸ்கந்த புராணத்தில் வேறுவிதமாகச் சொல்லப் படுகிறது. அது கீழே தரப்பட்டுள்ளது. இந்த மரத்தைப் பற்றி நாரதர், இம்மரம் விஷ்ணுவின் உடம்பில் உள்ள ஒரு ரோமத்தின் வடிவாகும். இதைக் கொண்டு சிலைகள் செய்க என்று கூறிவிட்டனர். மரத்தை வெட்டி, விஷ்ணு சிலையை யார் செய்வது என்று அரசன் வினா எழுப்பிய பொழுது, அசரீரி மூலம் அவனுக்கு விடை கிடைக்கிறது. சிறிது நேரத்தில் கிழட்டு மரத் தச்சன் வருவான். அவனை இந்தக் கோயிலில் உள்ள பீடத்தில் ஏற்றி வைத்துப் பிறகு அவனைச் சுற்றி மூடி விடவும். உள்ளே அவன் என்ன செய்கிறான் என்பதை யாரும் பார்க்கவோ, ஒட்டுக் கேட்கவோ கூடாது. மீறிப் பார்க்க, கேட்கத் துணிந்தால் அவர்கள் காதும் கண்ணும் போய்விடும். 15 நாட்களுக்கு இடைவிடாமல் பெரிய மரங்களில் இருந்து ஓசை எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அசரீரி சொல்ல அரசன் அவ்வாறே செய்தான். பதினைந்தாவது நாள் கிருஷ்ணன், பலராமன், சுபத்திரை ஆகிய மூவரின் சிலைகளைத் தச்சன் செய்து முடித்திருந்தான். மறுபடியும் அசரீரி பேசத் தொடங்கிற்று. “உடையணியாமல் உள்ள இந்தச் சிலைகளை யாரும் பார்க்கக்