பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 பதினெண் புராணங்கள் கணேசனுக்கு பிரம்மா கமண்டலத்தினையும், பிருத்வி ஒரு எலியையும் பரிசாகக் கொடுத்தார். கணேசனுக்கு கஜானனன், லம்போதரன், ஏகதந்தன், விக்னேஸ்வரன் எனப் பல பெயர்கள் உண்டு. தடைகளை நீக்குபவன் என்பதால் விக்னேஸ்வரன் என்ற பெயர் பெற்றார் கணேசன். நாராயணன் கூறத் துவங்கினார்: மாலி, சுமாலி என்ற இரு அரக்கர்கள் சிவனுடைய பக்தர்களாய் இருந்தனர். இவர்களை விரும்பாத சூரியதேவன் அவர்களைக் கொல்ல நினைத்துப் போர் செய்தான். அரக்கர்கள் சிவபெருமானை வேண்ட, அவர் தோன்றி, தன்னுடைய சூலாயுதத்தால் சூரியனைக் கொன்றுவிடவும், இச்செய்கையினால் உலகம் அனைத்தும் இருளில் மூழ்கியது. காசிப முனிவரும் தன் மகனுக்கு ஏற்பட்ட கதியை நினைத்துச் சிவபெருமானுக்கு சாபமிட்டார். "என் மகன் நெஞ்சை உன் சூலாயுதம் துளைத்தது போல், உன் மகனுடைய தலையும் ஒருநாள் வெட்டப்படும்" என்று சாபமிட்டார். இதனைக் கேட்ட நாரதர், விஷ்ணு கணேசனுக்கு ஐராவதம் என்னும் யானையின் தலையைப் பொருத்தினார் அல்லவா? அப்படி இருக்க கணேசனுக்கு ஒரே ஒரு தந்தம் மட்டும் இருப்பது எப்படி என்று வினவ, நாராயண முனிவரும் கூறத் துவங்கினார். ஜமதக்கினி முனிவரின் மகனாகிய பரசுராமன் வெளியே சென்றிருக்கும் பொழுது, கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் கூடித்ரிய அரசனால் ஜமதக்கினி முனிவர் கொல்லப்பட்டார். இதனால் கடுங்கோபம் கொண்ட பரசுராமன் இருபத்தியோரு தலைமுறை கூடித்ரியர்கள் இவ்வுலகில் இல்லாமல் செய்வேன் எனச் சபதமெடுத்து கூடித்ரியர்களைக் கொன்றான். சிவ பெருமானையே தன் குருவாகக் கொண்ட பரசுராமன் தன்