பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பதினெண் புராணங்கள் மீண்டு வந்த மகன் கதை துவாபர யுகத்தில் மிக சக்தி வாய்ந்த தீனநாதன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். எல்லா செல்வங்களும் நிரம்பி யிருந்தும், குழந்தைச் செல்வம் இல்லாமையால் மிக மனம் வருந்திக் காலவ முனிவரிடம் தன் குறையைச் சொல்லி வருந்தினான். அவர் நரபலி இடும் ஒரு யாகத்தைச் செய்து அதில் உறுப்பு அழகுகள் சிறிதும் குறைபாடில்லாத ஒருவனைப் பலியிடுவதானால் உனக்குக் குழந்தை பிறக்கும் என்று கூறினார். உடனே அரசனுடைய ஆணைப்படி பணியாளர்கள் நாடு முழுதும் பலியிடுவதற்குரிய ஒருவனைத் தேடிச் சென்றனர். இறுதியாக தாசபுரா என்ற இடத்தில் கிருஷ்ண தேவா - சுசீலா என்பவர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்துள்ள மூன்று பேரைக் கண்டவுடன் பணியாளர் மனம் திருப்தியடைந்தது. அனைத்து அழகுகளும் உடைய மூவரையும் அரசரிடம் அழைத்துச் செல்வது என்ற முடிவுக்கு வந்தனர். தாய், தந்தையர்கள் எவ்வளவு கேட்டும் அவர்கள் இரக்கம் காட்ட மறுத்தனர். இறுதியாக, மூவரில் ஒருவனும் நடுமகனு மாகிய ஒருவனை அழைத்துச் செல்ல ஏற்பாடாயிற்று. மகனை அழைத்துக்கொண்டு பணியாளர் சென்றதும் அத்துயரம் தாங்கமாட்டாத தாய் தந்தையர் கண்களை இழந்தனர். பணியாளரும் பலிக்குரியவனும் செல்கின்ற வழியில் விசுவா மித்திரருடைய ஆசிரமம் குறுக்கிட்டது. விசுவாமித்திரர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் யார்? மிக வருத்தத்தோடு இருக்கும் இந்த இளைஞன் யார்?' என்று கேட்டார். பணியாளர்கள் தாங்கள் வந்த காரியத்தை விளக்க மாகக் கூறினர். விசுவாமித்திரர், "இந்தப் பையனை விட்டு விட்டு அதற்கு பதிலாக என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்றார். பலியிடுவதற்கு அழகான இளைஞன் தேவையே தவிர ஒரு கிழவனை அழைத்துப் போவது சரியில்லை என்று