பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் -- 2廿 யாகத்தையும் அழித்து வருவாயாக!' என்று கட்டளையிட்டார். மிக வேகமாகச் சென்ற வீரபத்திரர் தட்சனுடைய யாகத்தையும், அது நடைபெற்ற மண்டபத்தையும் அழித்தார். அவருடன் சென்ற சிவ கணங்கள் முனிவர்களைப் பிடித்து நையப் புடைத்தார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த பிருகு முனிவனை ஒரு தூணில் கட்டி அவர் தாடியைப் பிய்த்து எறிந்தார். தட்சனுடைய கழுத்தை வெட்ட முயன்றபோது அது முடிய வில்லை. உடனே அவனைப் பிடித்து யாக பலி மிருகத்தைக் கட்டப் பயன்படும் யூபம்’ என்ற தூணில் கட்டி தட்சன் தலையை வெட்டியவுடன் அந்தத் தலை யாக குண்டத்தில் விழுந்து சாம்பலாயிற்று. அனைத்தையும் வெற்றியுடன் முடித்த வீரபத்திரர் சிவனிடம் வந்தார். இதனிடையே பயந்து ஒடிச் சென்ற முனிவர்கள் பிரம்மனிடம் நடந்ததைக் கூறி 'என்ன செய்வது என்று கேட்டனர். பிரம்மன், 'சிவனை மதியாது அகம்பாவத்துடன் நீங்கள் செய்த காரியத்துக்கு இந்த தண்டனை பொறுத்தமானதே. சிவனை எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் நேரே சிவனிடம் சென்று மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிவிட்டார். அவர்கள் அனைவரும் சிவனிடம் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். மேலும் இரண்டு வரங் களையும் வேண்டினர். ஒன்று, தட்சனைப் பிழைக்க வைப்பது. மற்றொன்று, பிருகுவின் முகத்தில் மறுபடியும் தாடி முளைக்க அருள்வது. ஏற்கெனவே சினம் அடங்கிய சிவன் அவர்களை அழைத்துக் கொண்டு தட்சனின் யாக சாலைக்கு வந்தார். தூணில் கட்டப்பட்டிருந்த பிருகுவிற்கு மறுபடியும் தாடி முளைக்குமாறு செய்தார். ஆனால், தட்சன் வெட்டுண்ட தலை யாக குண்டத்தில் விழுந்து சாம்பலாகி விட்டமையின் ஒர் ஆட்டின் தலையை எடுத்து அவன் உடம்பில் பொருத்தி தட்சனுக்கு உயிர் உண்டாகுமாறு செய்தார். எழுந்த தட்சன்