பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 பதினெண் புராணங்கள் கூடாது” என்று கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட பராசரன் சிவனை நினைத்துத் தவம் செய்தான். இவன் தவத்தில் மகிழ்ந்த சிவன், மிக அற்புதமான பல வரங்களைத் தந்தார். தவத்திலிருந்து மீண்ட பராசரன் தன் தந்தையைக் கொன்ற ருத்ரன் என்ற அரக்கனைத் தேடி அலைந்தான். அவன் கிடைக்காததால் கண்ணில்பட்ட அரக்கர்கள் அனைவரையும் எரித்துக் கொன்றான். இதை அறிந்த வசிட்டர், பராசரனை அழைத்து, உன் அழிவு வேலையை இத்துடன் நிறுத்து. உன் தந்தை ஒர் அரக்கனால் கொல்லப்பட்டான் என்றால் அது உன் தந்தையின் தலை யெழுத்து. அதற்காகக் கண்ணில்பட்ட அரக்கர்களை எல்லாம் அழிப்பது நியாயமில்லை. அரக்கர்களும் கடவுளால் படைக்கப் பட்டவர்களே. அரக்கர்கள், மனிதர்கள் ஆகிய இருவரும் இப் பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். இவ்விருவ 'ரிடையேயும் ஒரு வகையான சமநிலை இருந்து கொண்டுதான் இருக்கும். ஒன்று அதிகமாகும் போது, யாரோ ஒருவர் மூலமாக அது அழிக்கப்படும். இப்பொழுது நீ இந்தச் சமநிலையைக் குலைக்கும் முறையில் அதிகமான அரக்கர்களைக் கொன்று விட்டாய். ஆகவே இத்துடன் அழிவு வேலையை நிறுத்திக் கொள் என்றார். இந்த அறிவுரையைக் கேட்ட பராசரன் வேதசாஸ்திரங்கள் பயின்று மிகப் பெரிய அறிஞனாக மாறினான். புராண சம்ஹிதை விஷ்ணுபுராணம் இரண்டையும் இயற்றிய பெருமை பராசரனைச் சேரும். இந்தப் பராசர முனிவனின் மகனே கிருஷ்ண துவைபாயரான வேதவியாசன் ஆவான். அந்தகன் : ஹிரண்யக்ஷா என்ற அரக்கனின் மகன் அந்தகன். அந்தகன் கடுமையான தவம் இயற்றி, தன்னை யாரும் கொல்ல முடியாது என்ற வரத்தினை பிரம்மனிடம்