பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 4' 635 கொல்லச் செய்தார். இவ்விரு அரக்கர்களும் இறந்தபின்பு, பிரம்மன் தன் சிருஷ்டித் தொழிலைத் தொடர்ந்தார். சிவன் தன்னுடைய மகனாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக நீண்ட காலம் சோர்வும் அடைந்து அழத் துவங்கினார். அக்கண்ணிர்த் துளிகளினின்று பூத பிரேதா என்ற இரு பேய்கள் தோன்றினர். பிரம்மன் மிகவும் மனம் வருந்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பிரம்மனின் வாயிலிருந்து சிவன் தோன்றினார். குழந்தை வடிவிலிருந்து சிவன், பிறந்த உடன் அழத் துவங்கினார். பிறந்தவுடன் அழத்துவங்கியதால் அக்குழந்தைக்கு 'ருத்ரன்' என பிரம்மன் பெயரிட்டார். ருத்ரன் என்ற பெயருடன் பாவ, சர்வ, ஈசான, பசுபதி, மகாதேவா என்ற பெயர்களையும் சூட்டினார். பார்வதியின் ஆயிரம் நாமங்கள் சிவன் தட்சன் மகளாகிய சதியை மணந்தார். சதி இறந்து, இமவான் மகள் பார்வதியாக அவதரித்தார். இமவானும், மேனகாவும் அம்பிகையே தங்களுக்கும் மகளாகப் பிறக்க வேண்டும் என வேண்டினர். அம்பிகை அவர்கள் எதிரே தோன்றித் தன் தெய்வீக வடிவைக் காட்டி, தானே அவர்கள் மகளாகப் பிறப்பதாகக் கூறினார். அவர் பெயர்களுள் சில தந்துள்ளோம், உமா, நிஷ்கலா, அமலா, மஹேஸ்வரி, நித்யா, தேவத்மா, வியாபினி, ஜகன்மாதா, ஈஸ்வரப்ரியா முதலியவையாம். உத்தானபாதா வம்சாவளி சுயவம்பு மனு, புத்தரூபா ஆகிய இருவரின் மகன்களே உத்தானபாதா, பிரியவ்ரதா ஆகியோர். இவர்களில் துருவன் உத்தானபாதாவின் மகனாவார். மிகச் சிறந்த விஷ்ணு பக்தனாகிய துருவனுக்கு, சொர்க்கத்தில் துருவலோகம்