பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 பதினெண் புராணங்கள் இதன்பிறகு நாரதர் பத்ரிகாசிரமம் சென்றார். அங்கே நாராயண முனிவர், பொன்னால் ஆகிய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி அப்ஸரஸ்கள், கந்தர்வர்கள் முதலானோர் அமர்ந்திருந்தனர். தம்மை வணங்கிய நாரதரை அமரச் செய்து கிருஷ்ண லீலைகளைச் சொல்ல ஆரம்பித்தார். நாராயண முனிவர் சொல்லியவை பிரகருதி என்ற பெயருடன் தலைமை மேற்கொண்டுள்ள ஐந்து பெண் தெய்வங்கள் உண்டு. துர்க்கை, ராதா, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி என்போர் ஆவர். இவர்கள் அதிகாரத்தின் கீழ் ஒருசில சக்திகளை மட்டும் பெற்றுப் பணிபுரிபவர்கள் கங்கை நதி, துளசிச் செடி, மானசா என்ற பெயருடைய பாம்புகளின் அதிதேவதை, ஷஸ்தி என்ற பெயருடைய பிறக்கும் குழந்தைகளின் தெய்வம், மஸ்களச்சண்டி, காளி, வசுந்தரா என்பவர் ஆவர். இவர்களை அடுத்துக் கீழ்ப்படியில் உள்ளவர்கள் அக்னியின் மனைவியாகிய சுவாஹா, யாகத் தலைவனின் மனைவியாகிய தட்சிணாத, சுவதா என்ற பெயருடைய பித்ரிக்களின் மனைவி முதலியோர். எல்லாப் பெண்களும் மூலப் பிரகருதியின் வடிவங்கள் ஆவர். தனிப்பட்ட ஒரு பெண்ணைக் கொடுமை செய்தாலோ, அவமானப்படுத்தினாலோ, பிரகருதியை அவமானப்படுத்திய தாகும். பெண்களை மரியாதையுடன் நடத்துவது, பிரகருதியை மரியாதையுடன் நடத்துவது போலாகும். பிரகருதிக்குரிய வர்கள் நன்னடத்தை, அன்புடைமை, கணவனைப் போற்றுதல் ஆகிய பண்புகளுடன் இருப்பர். ராஜசகுணத்தில் தோன்றுப வர்கள், சுயநலம் உடையவர்களாய், உலக இன்பங்களை அனுபவிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களாய் இருப்பர். தாமச குணத்தில் தோன்றுபவர்கள் பிறரிடம் சண்டை இடும் இயல்பினராய். நன்னடத்தை இல்லாதவராய் இருப்பர்.