பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 பதினெண் புராணங்கள் மனோ வாக்கு, காயம் கடந்த மெய்ப்பொருள் என்பதும், அவனுள் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காணலாம் என்பதும் உணரப்பட வேண்டும் என்று இப்புராணத்தி லுள்ள ஒரு பாடல் கூறுவதால், இப்பொருள் அனைத்தை யும் உள்ளடக்கிப் பிரம்ம வைவர்த்தம் என்ற பெயரால் இப்புராணம் குறிப்பிடப்படுகின்றது. "வாக்கு மனம் கடந்தவனும், நிர்க்குன பிரம்மத்தின் வடிவாக உள்ளவனும், எவ்வித மாற்றமும் இல்லாதவனும், எவனிடமிருந்து பிரகிருதி பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய அனைவரும் தோன்றுகின்றனவோ அந்தக் கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று இப்புராணத்தில் உள்ள மற்றொரு பாடல் அவனுடைய துணையாகிய ராதை என்பவள், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி சாவித்திரி, காளி ஆகிய பல்வேறு சக்திகளின் உறைவிடமாவாள் என் இப் ம் வலியுறுத்துகிறது. பல பெயரிட்டு அழைத்தாலும், தெய்வங்கள் அனைத்தும் ஒன்றே என்பதை வலியுறுத்துவது இப்புராணம், யூரீகிருஷ்ணன் மகாதேவரைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும், மகாதேவர் கிருஷ்ணனைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும் இப் புராணத்தில் பல இடங்களில் வருவதால் "ஏகம்சத் விப்ர பகுதாவதந்தி' என்ற வேத வாக்கியம் நிரூபிக்கப் படுகிறது. 零 முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய முனிவர்கள் ஒய்வெடுத்துக் கொண் டிருந்தனர். அந்த நேரத்தில் மிக நீண்ட யாத்திரைக்குப் பிறகு லோமஹர்ஷனர் மகனாகிய செளதி முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டவுடன் செளனகரும் மற்ற முனிவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “முனிவனே! ஞானத்