பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: Loវើ 257 இத் தவத்தினால் ஒருவேளை தாங்கள் இறந்து போய்விட்டால் நாங்கள் யாரிடம் சென்று முறையிட முடியும்?” என்று வேண்டிக் கொண்டார்கள் அந்தப் போலித் தேவர்கள். அவர்கள் வேண்டுதல் எதுவும் அதிதியின் மனத்தைக் கலைக்கவில்லை. தங்களால் அவள் மனநிலையை மாற்ற முடியவில்லை என்று கண்டுகொண்ட அந்தப் போலித் தேவர்கள், உண்மையான தங்கள் அசுர வடிவை எடுத்துக் கொண்டு பல ஆயுதங்களை அவள் மேல் ஏவினார்கள். அதிதியின் தவ வலிமையால் அந்த ஆயுதங்கள் எதுவும் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை. மிக்க கோபம் கொண்ட அசுரர்கள் வாயிலிருந்து நெருப்புக் கிளம்பிற்று. அந்த நெருப்பும் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்கு பதிலாக அவள் தவம் செய்த வனத்தையே அந்த நெருப்பு கட்டுப் பொசுக்கிற்று. அந்த அசுரர்களையும் அதே நெருப்பு கொன்று விட்டது. இதனை அடுத்துவரும் வலி - வாமனன் கதை முன்னரே பிரம்ம புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது). ரேனும் கங்கையும் கரர் வழிவந்த பகீரதன் மிகவும் பலம் பொருந்திய ன்ேனனாக வாழ்ந்தான். நேர்மை நல்லொழுக்கம் விஷ்ணு பக்தி இவற்றை முழுவதும் பெற்றிருந்ததால் அவனுடைய ஆட்சி மிகவும் சிறப்புற்றிருந்தது. ஒருநாள் இயமன் பகீரதனைப் பார்க்க வந்தான். பகீரதன் எழுந்து இயமனுக்கு வணக்கம் செய்து, "தெய்வங்களுள் ஒருவரான தாங்கள் என்னைப் போல ஒரு சாதாரண மனிதனைத் தேடி வந்தது என் புண்ணியமாகும். தர்மம் என்றால் என்ன? அது எப்படிச் செய்யப்பட வேண்டும்? என்பதை விரிவாகக் கூறினால் பெரும் பயன் விளையும். தயவு செய்து தர்மத்தைப் பற்றி விளக்க வேண்டு ш.ц.–17