பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 75 அழைத்து விவரமாக அனைத்தையும் கேட்டாள். இவள் கூறியதைக் கேட்டவுடன் மிகுந்த கோபம் கொண்ட அரசி அவளை அடித்துத் துரத்தி விட்டாள். அழுது கொண்டே வந்த அவளை, தெருவில் விளையாடச் சென்றிருந்த சிறுமி சியாம பாலா ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டாள். பிராமணத்தி நடந்ததைக் கூறியவுடன் குழந்தை விரதம் இருக்கும் முறையை எனக்குச் சொல்லிக் கொடுங்கள், நான் செய்கிறேன் என்றாள். இலட்சுமி விரதம் எப்படி இருக்கவேண்டும் என்பதை பிராமணத்தி சியாமபாலாவிற்குச் சொல்ல, அவளும் அதை அனுஷ்டித்து வந்தாள். உரிய காலத்தில் சியாமபாலா, சித்தேஷ்வரா என்பவனின் மகன் மாலதார என்பவனை மணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குப் போய்விட்டாள். குழந்தை போனவுடன் அவள் தாய் தந்தையருக்கு செல்வம் எல்லாம் அழிந்து, வறுமை வாட்டியது. ஒருமுறை அரசன் பத்ராஷ்ரவ தன் மகளைப் பார்க்கச் சென்று நடந்தவற்றைக் கூறியவுடன் மகள் தந்தைக்குச் சிறந்த உணவளித்து, அவர் புறப்படும் பொழுது பொன்னையும், மணியையும் மூட்டையாகக் கட்டிக் கொடுத்தாள். மகிழ்ச்சியோடு மகள் கொடுத்த பரிசினைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து அரசன் பார்த்தான். அனைத்தும் மண்ணாகவும் கல்லாகவும் மாறியிருந்தது. சில நாட்கள் கழித்து அரசி தன் மகளைப் பார்க்கச் சென்றாள். நல்ல வேளையாக இலட்சுமி விரதம் என்று சொல்லக்கூடிய நாளாக அது அமைந்தது. மகளின் பிடிவாதத்தில் இணங்கி அரசியும் இலட்சுமி விரதம் இருந்தாள். இதனால் அவள் இழந்த செல்வத்தை மீட்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினாள். லட்சுமி விரதத்தின் மகிமை இதுவே ஆகும்.