பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 பதினெண் புராணங்கள் துண்டங்கள், இரத்தம் என்பவற்றை நிரம்ப எடுத்துக் கொண்டு, சுடுகாட்டிற்குச் சென்று மந்திரங்களை உச்சரித்து, பேய்கள், பிசாசுகள், வேதாளங்கள் ஆகியவற்றை விளித்து, இங்கே வந்து இவற்றை உண்ணுங்கள் என்று கூவினான். உடனே பேய் பிசாசுக் கூட்டம் அங்கே வந்தது. ஒரு சில பிசாசுகளுக்கு வேண்டுமானதைக் கொடுத்தபின், எதிரே ஒரு பெண் பிசாசு இருப்பதைக் கண்டான். அந்தப் பிசாசை விளித்து, நீ மற்றொரு கொலுசைக் கொடுப்பதானால் இங்குள்ள அனைத்தையும் உனக்குத் தருவேன்’ என்றான். அப்பிசாசு மற்றொரு கொலுசையும் தந்தது. அதனுடன், இங்கே நிற்பவள் வித்யுத்பிரபா என்னும் என் மகள் ஆவாள். இவளையும், இந்தப் பொன்னாலான தாமரையையும் எடுத்துச் செல்' என்றது. மன்னனிடம் கொலுசைக் கொடுத்து விட்டு, வித்யுத்பிரபாவை மணந்து கொண்டான். சில காலம் கழித்து, இரண்டாவது மனைவியைப் பார்த்து அசோகன் உன் தாய் எங்கிருந்து இந்தப் பொற்றாமரையைப் பெற்றாள் என்றான். அவள் அந்த இடத்தைக் காட்டுகிறேன் என்று கூறி அவனையும் அழைத்துக் கொண்டு ஒரு குளத் திற்குச் சென்றாள். கபாலசவோதனன் ஆட்சிக்குட்பட்ட இக் குளத்தில்தான் அத்தாமரைகள் உள்ளன என்றாள். அசோகன் பல தாமரைகளைப் பறித்தான். அவனைத் தடுக்க வந்த பிசாசுகளைக் கொன்றான். குளத்திற்குக் காவலாக இருந்த கபாலசவோதனாவைக் கொல்ல முயல்கையில், வித்யாதர மன்னன் தோன்றி, அசோகனே, நில். அந்த வேதாளம் பூர்வத்தில் உன் சகோதரன் விஜயனாக இருந்தவன். அவனை விட்டுவிடு. உன்னுடைய சாபம் நீங்கி விட்டதால் நீ வித்யாதர னாக மாறி என்னுடன் தேவலோகம் வந்து விடு' என்றான். அதைக் கேட்ட அசோகன், அரசே! தேவலோகம் வர ஆசையில்லை. அப்படிப் போவதாக இருந்தால் என்