பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் - 559 மஹறிசாகர சங்கமம் : மஹறி என்ற பெயருடைய பிரசித்த மான நதி கடலில் கலக்கும் இடம்தான் மஹிசாகர சங்கமம் எனப்படும். இந்தச் சங்கம ஸ்தானம் மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்றும், இந்தத் தீர்த்தத்தில் குளித்தால் உலகில் உள்ள எல்லாத் தீர்த்தங்களிலும் குளித்த பயன் கிடைக்கும் என்றும் ஸ்கந்தன் சொல்லியதாக இப்புராணம் கூறுகிறது. நாரதர் இதனுடைய பெருமையைப் பின்வருமாறு கூறினார். ஒருமுறை நாரதர், பிருகு முனிவரிடம் வந்து மஹறிசகார சங்கமத்தில் ஏதேனும் தனிப்பட்ட சிறப்பு உண்டா என்று கேட்டார். அப்பொழுது இந்தத் தீர்த்தத்தின் பெருமையைப் பிருகு சொல்ல ஆரம்பித்தார். நான் தீர்த்த யாத்திரை சென்ற காலத்தில் ஒருமுறை மஹிசாகர சங்கமத்தில் வந்து சேர்ந்தேன். மிகவும் வயது முதிர்ந்து தள்ளாடிய நிலையில் ஒரு முனிவர் ஆகாயத்தில் கைகளை உயர்த்தி ஓவென்று அலறிக் கொண்டிருந்தார். அதிசயத்துடன் அவரை அணுகி அவர் வரலாற்றைத் தெரிந்து கொண்டேன். அந்தப் பெரியவர் தன் மனைவி, சீடர்கள் ஆகியோருடன் கங்கை சங்கமம் ஆகும் இடத்தில் ஒர் ஆசிரமம் அமைத்து அங்கே தங்கி இருந்து தம் பிதுர்க்களுக்குப் பிரீதி ஆன பல சடங்குகளைச் செய்து வந்தார். ஒருமுறை அவர் மேலே பார்த்த பொழுது தன்னுடைய பிதுர்க்கள் எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பதையும், சுபத்திராவின் பிதுர்க்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதையும் கண்டார். இக்காட்சியைத் தேவசர்மா பெற்றது. கங்கைக் கரையிலாகும். தம் பெற்றோர் எளிய வாழ்க்கை வாழ்வதற்கும், சுபத்ராவின் பெற்றோர் செல்வ வாழ்க்கை வாழ்வதற்கும் காரணம் என்ன என்று ஆராய்ந்த பொழுது, தேவசர்மா ஒன்றினைக் கண்டார். சுபத்ரா மஹறிசங்கம சாகரத்தில் வசித்துக் கொண்டிருந்து, பிதுர்க்கடனை இயற்றியதால் அவருடைய பிதுர்க்கள் செல்வ