பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 8 தமிழ் பயிற்றும் முறை

பயன்படுகின்றன. இருபத்தொரு ஆண்டு முடிந்த யாவரும் வாக்குரிமை பெற்று மக்களாலேயே அரசாங்கம் நிறுவப் பெறும் இக்காலத்தில் இவை பயன்படாத நேரழே இல்லை. இளமையில் தாய்ம்ொழிப் பயிற்சியின்றேல் சிறந்த மனப்பயிற்சி அமையாது; நாட்டு வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்ள இயலாது ; மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் ஒருவரிடம் அமையா ; நல்லொழுக்கமும் இறையன்பும் ஏற்படுவதற்கும் தாய்மொழிப் பயிற்சி மிகவும் இன்றி யமையாதது. வாழ்வை வளப்படுத்தும் இப் பண்புகளில் ஒவ்வொன்றையும் குறித்து ஒரு சிறிது ஆராய்வோம். தாய்மொழிப் பயிற்சியினுல் இவை எவ்வாறு கைவரப்பெறு கின்றன என்பதையும் அறிவோம்.

எண்ண வளர்ச்சிக்கு மொழி இன்றியமையாதது. எண்ணமும் மொழியும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாத படி அமைந்திருக்கின்றன. ஒன்றைவிட்டுப் பிறிதொன்றை வளர்க்கவும் இயலாது. பேசப்படும் சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும், பேசுவோனுக்கும் கேட்போனுக்கும் நேரான தொடர்பை ஏற்படுத்துவது மொழியே. ஒரு குழந்தை பசுவைப் பார்க்கின்றது, இஃது அதற்கு ஒரு புதிய பட்டறிவு (Experience). ஒவ்வொரு தடவையிலும் அதைப் பார்க்கும்போது புதிய பட்டறிவு அக்குழந்தைக்கு ஏற்படு கின்றது. ஒரு தடவை பசு புல்லைத் தின்பதையும், மற்ருெரு தடவை அக்குழந்தையின் அன்னே பசுவிற்குத் ‘தீனி வைத்துப் பால் கறப்பதையும், பிறிதொரு தடவை பசு கன்றுக்குப் பால் ஊட்டுவதையும் குழந்தை காணக் கூடும். இந்தக் காட்சிகள் யாவும் அக்குழந்தையின் மனத்தில் பதிவு பெறுகின்றன. பசு என்ற சொல்லைக் கேட்ட வுடனேயே பசுவின் உருவம் அக்குழந்தையின் மனத்திரையில் அமைகின்றது; பசுவைப்பற்றிய செய்திகள் யாவும் அதன் மனத்தால் சேகரிக்கப்பெற்று அதனுடைய அறிவு முகட்டில் வைக்கப்பெறுகின்றன. தொடர்பாக எழும் கருத்துக்கள் அனைத்தையும் ஒரே காலத்தில் மனத்திற்குக்

"? Ballard, P. B : Thought ard Language–-Lığığ 17.