பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 பதினெண் புராணங்கள் வில்லுடன் ஆகாயத்தில் செல்லும் மானைத் துரத்திச் சென்றது. ஆகாயத்தில் சென்ற சிவனது ஒரு பகுதி காலபுருஷ என்ற பெயருடன் ஆகாயத்தில் தங்கிவிட்டது. யாக சாலையில் தங்கிய பகுதி ஜடாதரா என்ற பெயரைப் பெற்றது. வானத்தில் தங்கிய சிவனுடைய பாகம் மேஷத்தில் தலையும், ரிஷபத்தில் முகமும், மிதுனத்தில் தோள்களும், சிம்மத்தில் இதயமும், கடகத்தில் இரு பக்கங்களும், கன்னியின் வயிறும், துலாத்தில் கொப்பூழும், விருச்சிகத்தில் இடுப்பும், தனுசுவில் தொடையும், மகரத்தில் கால்களும், கும்பத்தில் கணுக்கால்களும், மீனத்தில் பாதங்களும் இடம் பெற்றன. இதுவே வான் மண்டலத்தில் உள்ள பன்னிரண்டு வீடுகளும் பிறந்த கதையாகும். மன்மத தகனம் வெகு காலத்திற்கு முன்னர், நேர்மையான விவ்ரிசா என்ற பிராமணன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அஹிம்சா என்ற மனைவியும், ஹரி, கிருஷ்ணா, நர, நாராயண என்ற நான்கு மகன்களும் முனிவர்களாகி தவத்தில் ஈடுபட்டனர். இமயமலையில் உள்ள வதரிகாசிரமத்தில் பர்ணசாலை அமைத்துத் தவம் செய்தனர். இவர்கள் கடுமையாகத் தவம் செய்வதை அறிந்த இந்திரன் தன்னுடைய இந்திரப்பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கருதி, அவர்கள் தவத்தைக் கலைப்பதற்காக ரம்பா என்ற அப்ஸரஸையும், மதனா என்பவரையும் அனுப்பிவைத்தார். இவர்கள் இருவரும் வதரிகாசிரமம் அடைந்த பொழுது, அங்கு பருவத்தில் மாற்றம் ஏற்பட்டது. மலர்கள் மலர்ந்தன, கொடிகள் செழுமையாக வளர்ந்தன. தன் தவம் கலைந்த நாராயண முனிவர் வியப்புடன் இவற்றைப் பார்த்துவிட்டு, அனங்கனைப் பார்த்தார். அனங்கன் என்று சொன்னது