பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G. பாகவத புராணம்) இப்புராணம் பற்றி. பதினெட்டுப் புராணங்களில் ஐந்தாவதாக உள்ள பாகவத புராணம் வைணவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியா முழுவதும் தனித் தனியாகவும், கூட்டமாகவும் இப்புராணத்தைப் படிக்கின்றனர். கிருஷ்ணன் பற்றி விரிவாகப் பேசுகின்றது. இப்புராணம். இப்புராணத்தின் தலையாய சிறப்பு, பக்திக்கு முதலிடம் கொடுப்பதுதான். வேதவியாசர் பாரதத்தையும், ஏனைய புராணங் களையும் எழுதிய பிறகுக.ட மனத்தில் அமைதி யில்லாமல் இருந்தார் என்றும், இப்புராணத்தை எழுதிய பிறகே மனநிறைவு பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது. வேறு புராணங்களில் காணப்படாத அளவுக்கு பக்திக்கு பாகவத புராணம் இடம் கொடுத்திருக்கின்ற காரணத்தால், பரத கண்டத்திலேயே மிகப் பழங்காலத் திலேயே பக்திக்கு முதலிடம் கொடுத்து வளர்த்த பெருமை தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. இவ்வாறு சொல்ல ஒரு முக்கியமான காரணம் உண்டு. பாகவத புராணத்தின் முதல் அத்தியாயத்தின் 48வது பாடல்