பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாமன புராணம் 617 அழைக்கப்பட்டனர். தந்தை இறந்தவுடன் பாகப் பிரிவினையில் தகராறு எழுந்தது. வீட்டின் பாதிப்பகுதி எனக்குச் சேர வேண்டும் என்று நான் கூறியவுடன் என் அண்ணன், 'குள்ளன் முழுமனிதன் அல்லன். ஆகவே அவனுக்கு ஒரு பங்கு தருவது என்பது அர்த்தமற்ற செயலாகும் என்று கூறினான். நான் பிடிவாதமாக என் பங்கைத் தரவேண்டும் என்று கேட்டதற்கு என்னைத் துக்கி ஆற்றில் எறிந்து விட்டான்” என்று கூறி முடித்தான். இதைக் கேட்ட துந்து, மிகவும் மனம் வருந்தி “கவலைப் படாதே! உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ, அது எந்த இடத்தில் வேண்டுமோ அங்கு உனக்குத் தருகிறேன்” என்றான். குள்ளன் பயந்தவன் போல, உடலைச் சுருக்கி வளைத்துக் கொண்டு, “எங்கே எனக்கு இடம் கொடுத்தாலும் என் அண்ணன் பிடுங்கிக் கொள்வான். ஆகவே என் கால் அளவால் மூன்றடி நிலம் தந்தால் போதுமானது” என்றான். துந்து ஒப்புக் கொள்ள வாமனன் விஸ்வரூபம் எடுத்து பூமியை ஒர் அடியாகவும், ஆகாயத்தை ஓர் அடியாகவும் அளந்த பிறகு மூன்றாவது அடியை துந்துவின் முதுகில் வைத்து அழுத்த பூமியில் ஒரு பெரிய பள்ளம் தோன்றி அதில் துந்து வீழ்த்தப்பட்டான். அங்கு துந்து கயிற்றால் கட்டப்பட்டு, தொங்க விடப்பட்டான். புரூரவர்களின் வரலாறு சந்திர வம்சாவளியின் முதல் அரசன் புரூரவன் ஆவான். அம்மன்னனின் பழைய வரலாற்றை, வாமன புராணம் பேசுகிறது. மத்ரா அரசாட்சியில், சகலா என்றொரு நகரம் உள்ளது. அந்நகரத்தில் தர்மா என்ற பெயருள்ள வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் சாஸ்திரங்களை நன்கு கற்றவனாகவும்,