பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(14. 6}}|s|DóðT புராணம்) இப்புராணம் பற்றி. வாமன புராணம் விஷ்ணு எடுத்த அவதாரத்தைப் பற்றிப் பேசுவதாகும். இது 6,000 பாடல்களை உடையது. இந்தப் புராணத்தில் பின்வரும் தலைப்புகள் விரிவாகப் பேசப்பெறுகின்றன. தட்ச யக்ஞம், இமவான் மகளாகப் பார்வதியின் தோற்றம், பார்வதியின் தவம், கணேசர் தோற்றம், கார்த்திகேயன் கதை, பிரகலாதன் நைமி சாரண்யத்திற்கு யாத்திரை சென்ற கதை குருகேத்திரச் சிறப்பு சிவபெருமான் அணிந்திருக்கும் பாம்புகள் பற்றிய கதை, மகிஷாசுரன் வதம், அந்தகன் கதை விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த கதை ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஒருமுறை நாரதர் புலஸ்திய முனிவரிடம் சென்று வாமன புராணத்தைச் சொல்லுமாறு வேண்டினார். புலஸ்தியர் சொன்ன கதை வாமன புராணமாக வந்துள்ளது. சிவ - பார்வதி சிவபெருமானும், பார்வதியும் மந்தர மலையில் வசித்துக் கொண்டிருந்த பொழுது, கோடையின் வெம்மை தாங்காத