பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 435 பிரகருதி பரமாத்மாவினுள் ஐக்கியப்பட்டது. அது தனித்து இயங்குவதில்லை. பொன்னில்லாமல் ஒரு பொற்கொல்லன் எப்படி ஆபரணங்கள் செய்ய முடியாதோ, அதேபோல, குயவன் மண்ணில்லாமல் பானைகள் செய்ய முடியாதோ அதுபோல பிரகருதி இல்லாமல் பரமாத்மா படைத்தல் தொழிலைச் செய்ய முடியாது. தொடக்கத்தில் கிருஷ்ணன் தன்னையே இரண்டாகப் பிரித்துக் கொண்டான். வலப்பகுதி ஆணாகவும், இடப்பகுதி பெண்ணாகவும் வடிவெடுத்தான். இப்பிரகருதியே ராதா என்றும், ராதிகா என்றும் வழங்கப் படுவர். இதன் பிறகு பிரம்ம வைவர்த்த புராணம் சரஸ்வதி கங்கை பத்மாவதி ஆகிய ஆறுகளின் தோற்றத்தையும், கலியுகத்தில் ஏற்படப்போகும் அதர்ம வளர்ச்சியையும் கல்கியின் தோற்றத்தையும், அதன்பிறகு ஏற்படப் போகும் பிரளயத்தையும் விரிவாகப் பேசுகிறது. பிரளயத்தின் முடிவில் மறுபடியும் சத்ய யுகம் வரப்போகிறது என்றும் இப்புராணம் கூறுகிறது வகந்தராவின் கதை அடுத்தபடியாக நாராயண முனிவர் நாரதருக்கு வசுந்தரா அல்லது பிருத்வியின் கதையைச் சொல்லத் தொடங்கினார். இதுவரை மது, கைடபர்களைக் கொன்று அவர்கள் தசையினை எடுத்துக் கிருஷ்ணன் பூமியை உண்டாக்கினார் என்ற கதை வழங்கி வந்தது. இந்தக் கதையை நான் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. மது கைடபர்கள் தண்ணீர் இல்லாப் பகுதியில் தங்களைக் கொல்லவேண்டும் என்று எப்பொழுது வேண்டிக் கொண்டார்களோ அப்பொழுதே தண்ணிர் இல்லாத பகுதியும் உண்டு. அதாவது பூமியும் உண்டு என்பதை அக்கதை ஏற்றுக் கொள்கிறது. என்னைப் பொறுத்தவரை