பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பதினெண் புராணங்கள் அரசனின் மனைவிக்கு மனினி என்பது பெயர். அரசனின் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிடும் பொழுது அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு நீர் அரசன் மேல் விழுந்தது. அரசன் வியப்புடன் “எதற்காக அழுகிறாய்?" என்று கேட்டான். அரசி சிறிது மெளனம் சாதித்து, பின்பு அரசன் தலையில் வெண்முடி இருப்பதைக் கூறினாள். அதைக் கேட்ட அரசன் சிரித்து விட்டு, “நான் வேதங்களைக் கற்றிருக்கிறேன். ஆயிரக்கணக்கான யாகங்களைச் செய்திருக்கிறேன். இது முதுமை அடைந்து விட்டேன் என்பதற்குச் சாட்சி ஆகும். நான் காட்டிற்குச் செல்லும் நேரம் வந்து விட்டது” என்று கூறினான். இதை அறிந்த மக்கள் பெரிதும் வருத்தமுற்றனர். அரசன் காட்டிற்குச் சென்று விட்டால் நாட்டின் சுபிட்சம் மறைந்து விடும் என்று கருதினர். அரசன் தன் மகனுக்கு முடிசூட்டு வதற்கு நாள் பார்க்கும்படி கூறியும், வேண்டுமென்றே நாளைக் குறிப்பதில் தாமதம் செய்தனர். அரசனைப் போகக்கூடாது என்று பிராமணர்கள் பலர் கூறினர். அரசன் அவர்கள் வார்த்தையைக் கேட்கவில்லை. உடனே பிராமணர்கள் அனைவரும் கூடி, காமரூபம் என்ற காட்டில் உள்ள சூரியன் கோயிலுக்குச் சென்று தவம் செய்தார்கள். மூன்று மாதம் ஆனவுடன் சூரியன் தோன்றினான். பிராமணர்கள் துரியனை வணங்கித் "தங்கள் அரசன் இன்னும் பதினாயிரம் ஆண்டுகள் இளமையோடு இருந்து அரசாட்சி செய்ய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்கள். சூரியன் அந்த வரத்தைக் கொடுத்ததும் பிராமணர்கள் மகிழ்ச்சியோடு வந்து அரசனிடம் கூறினார்கள். அரசன் மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக வருத்தப்பட்டான். ஏனென்று கேட்டபொழுது அவன் கூறிய விடையானது, "நீங்கள் சொல்கிறபடி நான் இன்னும் பதினாயிரம் ஆண்டுகள் இருந்தால் என்னுடன் யார் உயிரோடு