பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 427 புராணத்தில் கூறப்பட்டதற்கும் திறை வேறுபாடுகள் உள்ளன, இதற்கு அடுத்தபடியாக பிரம்ம வைவர்த்த புராணம் காலம் பற்றிப் பேசுகிறது. இதனை முன்பே பிரம்ம புராணத்தில் கூறியிருக்கிறோம், கோலோகாவில், ரசமண்டலத்தில் கிருஷ்ணன் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது அவரது இடப்பாகத்தில் இருந்து, முழு அலங்காரங்களுடன் கூடிய, பதினாறு வயது மதிக்கத் தக்க பெண்ணொருத்தி தோன்றினாள். ரசமண்டலத்தில் தோன்றியதால் இவள் பெயர் ராதை என்றாயிற்று. (பதினெட்டுப் புராணங்களில் இந்தப் புராணம் ராதையைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. அடுத்தபடியாக பத்ம புர7ணம் போகிற போக்கில் ராதையின் பெயரைச் சொல்விச் செல்கிறது. இவை இரண்டு புராணங்கள் தவிர, வேறு எந்தப் புராணத் திலும் ராதையின் பெயரோ, அவளைப் பற்றிய குறிப்புகளே7 எதுவுமில்லை, டாகவதத்தில் கூட- கிருஷ்ணன் வரலாறு விரிவாகக் கூறப்பட்ட இடங்களில் கூட ராதையின் பெயரே இல்லை என்பது ஆறியத்தக்கது, ராதையின் ஒவ்வொரு மயிர்க்காலில் இருந்தும் அழகு வாய்ந்த கோபிகைகள் தோன்றினர். கிருஷ்ணன் உடம்பு மயிர்க்காலில் இருந்து முப்பது கோடி கோபிகைகள் தோன்றினர். இவர்களை அல்லாமல், பசுக்கள், எருதுகள், குதிரைகள், சிங்கங்கள், அன்னப்பறவைகள் முதலியவை கிருஷ்ணனின் உடலிலிருந்து தோன்றின. கிருஷ்ணன் தன் உடலில் இருந்து வந்த எருதை சிவனுக்கும், அன்னத்தை பிரம்மாவிற்கும், வெண்குதிரையை தர்ம தேவதைக்கும், சிங்கத்தை துர்க்கைக்கும் கொடுத்தார். ஐந்து அற்புதமான ரதங்கள் அவர் உடலினின்று தோன்றின.