பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரத புராணம் 269 பெறலாம். ஞானம் என்பது நம்பிக்கை என்னும் பாறையின் மேல் எழுந்தாலொழிய நிலை பெறாது. நற்செயல்கள் விஷ்ணுவிடம் நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன. உண்மையில் ஞானத்தை அடைவதற்குச் செயல்களே (கர்மமே) அடிப்படையாகும். நேரடியாக ஞான யோகத்தில் ஈடுபடுபவர்கள் மிக மிகச் சிலரே. ஞானத்தின் முதிர்ந்த நிலையை அடையும்பொழுது எல்லாப் பொருளுடனும் விஷ்ணுவே நிறைந்திருப்பதையும், ஒருயிருக்கும், மற்றோர் உயிருக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை என்பதை அறிய முடியும் எல்லாம் விஷ்ணு மயம் என்பதை அறிகின்ற நிலையே “யோகம்” என்று சொல்லப்படும். இந்த உயர்ந்த ஞானத்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்ட ஒருவனையே "முமுக்o” என்று கூறுவர். முமுக்oக் களைத் தெரிந்து கொள்வதற்குச் சில அடையாளங்கள் உண்டு. முமுக்oயிடம் கோபம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்புணர்ச்சி என்பவை அறவே இராது. அவன் பொறி புலன்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்லன். எப்பொழுதும் பிறர் மேல் இரக்கம் கொள்பவன் ஆவான். அவன் மனம் எப்பொழுதும் விஷ்ணுவிடமே லயித்திருக்கும். யோகத்தை வேறு ஒரு வகையாகவும் விளக்கலாம். பரமாத்மன் என்று சொல்லப்படுகின்ற ஒன்றிற்கும், வெவ்வேறு உடம்புகளில், வெவ்வேறு குறிகளுடனும் அடையாளங் களுடனும், அந்த உடலுக்குரிய அகங்காரங்களுடனும் இருக்கும் ஜீவாத்மாவுடன் இருக்கும் ஒற்றுமையைக் காண முற்படுவதே யோகமாகும். ஜீவாத்மா உடம்பு என்னும் பருப்பொருளின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நிற்கிறது. இந்த உடம்பு கட்டுப்பாடு என்பது, ஒரு மாயை என்று அறிவதே அந்த உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மாவுக்கு மிக முக்கியமான செயலாகும். இந்த உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான்