பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 141 மாறுதலைச் செய்தது. திடீரென்று இளவேனிற்காலம் வந்தது. தென்றல் வந்தது. மரங்கள் மலர்கள் பூத்தன. வண்டுகள் ரீங்காரமிட்டன. பறவைக் கூட்டங்கள் ஜோடி ஜோடியாக இசைபாடிக் களித்தன. சிவபிரான் கண்ணை விழித்தார். அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில் தவம் செய்து கொண் டிருந்த பார்வதியும் இங்கு வந்து சேர்ந்தார். கண்விழித்த சிவபெருமானுக்குச் சுற்றுமுற்றும் பார்க்கையில் திடீரென்று தோன்றிய வசந்தகாலம் யாரால் வந்தது என்று பார்த்தார். தன் தவம் கலைக்கப்பட்டதைப் பார்த்தார். மன்மதன் இங்குமங்கும் ஒடி ஒளிந்து கொள்ள முயற்சிப்பதையும் பார்த்தார். உடனே அவர் நெற்றிக்கண் திறந்தது. மன்மதன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவியாகிய ரதி ஒலமிட்டு அழத் துவங்கினாள். தேவர்கள் சிவபிரானை வந்து வணங்கி, ‘ஐயனே! தாரகாசுரன் கொடுமையைத் தாங்க முடியாத நாங்கள் செய்த சூழ்ச்சிதான் அது. எங்கள் வேண்டுகோளை ஏற்றுத்தான் மன்மதன் இவ்வாறு செய்தான். அவனை மன்னித்து உயிர்ப் பிச்சை தர வேண்டும்” என்று வேண்டினர். சிவபிரான், "அது நடவாத காரியம். நடந்தது நடந்து விட்டது. மன்மதன் கிருஷ்ணனின் பிள்ளை பிரத்யும்னனாகத் தோன்றுவான். அதுவரையில் ரதி பொறுத்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டார். தேவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. சிவன் - பார்வதி திருமணம் நடைபெறவில்லை. மன்மதன் சாம்பலானதுதான் மிச்சம். பார்வதியின் தவம் * சிவபிரானிடம் மனத்தைப் பறிகொடுத்த பார்வதி, மன்மதனும் எரிந்து விட்டதால் என்ன செய்வது என்று அறியாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். அப்பொழுது நாரதர் தோன்றி, "அம்மா! நான்முகனும், விஷ்ணுவும் கூட