பக்கம்:காதல் மனம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி

47

என் வீட்டுக்கு வந்தபிறகு அவள் நிலைமை சற்று மாறியது என்னுடையவும், என் ம ைவியுடை யவும் விருப்பத்திற்கு இசைக்து, அவள் குளித்துக் கொண்டாள்; தலையில் எண்ணெய் தடவி வாரிக் கொண்டான். கந்தல் அகற்றப்பட்டு, என் மனைவி பின் ஒரு பழைய சேலை அவள் உடம்பை மூடிற்று. திருப்தியுடன் ஆகாரம் அருந்தினுள். இப்போது அவள் தோற்றமே அடியோடு மாறி வி ட் டது. அவளைப் பார்ப்பவர்கள் பிச்சைக்காரி என்று சொல்ல முடியாது.

எங்கள் அன்பை அவள் பெற்று விட்டாளென் மூலும், ஏனே மிகவும் காணமடைந்தாள். இக்கப் பிச்சைக் கார காய்க்கு இத்தனே உபசாரமா?"என்று அவளே சொல்லிக்கொண்டாள். அவள் முகத்திலே துயரமும், மகிழ்ச்சியும் தோன்றித் தோன்றி மறைக் தன. என்ன விசித்திரப் பிறவியோ!

அவள் என் வீட்டிற்கு வந்த எட்டு நாட்களாய் விட்டன. எடுபிடி வேலைகளைச் செய்துகொண்டு எங் கள் கிர்ப்பங்கத்திற்கு இசைந்து, வீட்டில் தங்கியிருக் கிருள். ஏனே, அவள் வரலாற்றைக் கேட்டறிய வேண்டுமென்ற ஆசை என் மனதைக் கிள்ளியது. அவனது வாழ்க்கையிலே ஏதேனும் விசோதமான அனுபவங்களிருக்க வேண்டுமென்பது எனது எண் னம்.அக்தஎண்ணத்தை உறுதிப்படுத்தின அவளது கெளரவமான பேச்சும், பண்பட்டநடவடிக்கைகளும்.

  • 演 *

அன்று இரவு. முற்றத்தில் ஒரு கட்டிலின் மீது நான் சாய்ந்து கொண்டிருந்தேன். என் மனைவி வீட்டு வேலைகளே கவனித்துக்கொண்டிருக்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/50&oldid=1473868" இலிருந்து மீள்விக்கப்பட்டது