பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4. தமிழ் பயிற்றும் முறை'


திட்டத்தில் முதலிடம் பெறுவதில் வியப்பொன்றும் இல்லை. எனவே, தாய்மொழியாசிரியர்கள் இதைக் கற்பிக்கும் முன்னர், கற்பிக்க வேண்டிய நோக்கங்களை , அறிந்து கற்பித்தல் இன்றியமையாதது. அந்நோக்கங்கள் யாவை என்பதை ஈண்டு நோக்குவோம்.

மனத்தில் உள்ளவற்றை வெளியிடல் : மொழியின் மூலமாகத்தான் நமது எண்ணங்கள், கருத்துக்கள், உணர்ச்சிகள் முதலியவற்றைத் தெரிவிக்கின்றோம். பேச்சாலும் எழுத்தாலும் பிறர் கருத்துக்களை அறிய முடிகின்றது. மக்களின் பொது வாழ்க்கைக்கு இன்றியமையாத தாய்மொழியைப்பயன் எய்தும் முறையில் மாணாக்கர்கள் ஆதிறமையுடன் கையாளக் கூடியவாறு கற்பிக்க வேண்டும். முதலில் வேண்டப்படுவது தெளிவு சரியாகச் சொல்வதை அடுத்ததாகக் கொள்ளலாம். இவ்விடத்தில் ஜார்ஜ் சாம்சன் என்ற ஆங்கிலக் கல்வி நிபுணர் கூறியிருப்பதைத் திரும்பக் கூறுதல் பொருத்தமாகும் : "இங்ஙணம் நுண்ணிய எண்ணங்களும் தெளிவான கருத்துக்களும் தோன்று:வதற்கு ஆசிரியர் மாணாக்கர்களிடம் (1) எளிய முறையில் ஒரு பொருளைக் குறித்துத் தெளிவாகப் பேசவும், (2) தெளிவான முறையில் ஒருவர் ஒரு பொருளைப்பற்றிக் கேட்கவும் கேட்டுப் பொருளுணரவும், (3) ஒரு பொருளைத் தெளிவான முறையில் படிக்கவும் படித்துப் பொருளுணரவும், (4) ஒரு பொருளைப்பற்றித் தெளிவான எளிய முறையில் எழுதவுமான ஆற்றல்களை உண்டு பண்ணுவதாகும். பிறருக்குக் கற்பிக்கும் ஆசிரியரிடம் இப்பண்புகள் அமையவேண்டும்” . தாய்மொழியில் தெளிவாகப் பேசவும் படிக்கவும் எழுதவுமான பயிற்சிகளைப் பள்ளியில் அளித்து இவ்வாற்றல்களை வளர்த்தால் அவர்கள் வாழ்க்கைத் துறையில் இறங்கிச் செயலாற்றும்பொழுது அவை பெரிதும் துணையாக இருக்கும். மக்களாட்சி நிலவும் நம் நாட்டில் ஒரு சிறந்த குடிமகனாக வாழ்வதற்கு இவ்வாற்றல்கள் மிகவும் இன்றி யமையாதவை. ஒரு நல்ல குடிமகனுக்குத் தெளிவான* George Sampson : “English for the English ".