பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8 தமிழ் பயிற்றும் முறை

களும், பிறரும் தொலைபேசிமூலம் தாய்மொழியில் பேசிப் பல செயல்களை நிறைவேற்றிக்கொள்ளுகின்றனர். பெரும் பாலான வானொலி நிகழ்ச்சிகள் தாய்மொழியில் அமைக்கப் பெறுகின்றன. ஒலிபெருக்கி வந்த பிறகு ஒருவர் பேசுவதை ஒரே காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கேட்க முடிகின்றது. நாடு விடுதலைப் பெறுவதற்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே பொதுப்பேச்சு மேடையைத் தாய்மொழி தனக்கே என்று உரிமையாக்கிக்கொண்டுவிட்டது. வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை வந்த பிறகு பொதுமேடையில் மக்கள் மனத்தை ஒருமுகப்படுத்தும் பல்வேறு பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றின் நிகழ்ச்சிகள் தாய்மொழியிலேயே நடைபெறுகின்றன. சட்டசபை நிகழ்ச்சிகளும் தாய் மொழியான தமிழிலேயே நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இன்று செயற்பட்டுவிட்டது.

பொதுமேடையைத் தாய்மொழி கைப்பற்றிய காரணத்தால் இன்று நாட்டில் பல்வேறு இயக்கங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. மக்களின் எதிர்கால வாழ்வை மக்களே வகுத்துக்கொள்ளவேண்டுமென்கிற குரல் எம் மருங்கும் எழுப்பப்படுகின்றது. மொழியின் அடிப்படையில் மாநிலப் பிரிவினை செய்யப்படவேண்டும் என்று அறிஞர்கள் உணர்ந்துவருகின்றனர். அதற்கென ஏற்பட்டுப் பணியாற்றி வரும் குழுவின் அறிக்கையையும் அதுபற்றிய பல்வேறு திறனுய்வுகளையும் பல அறிஞர்களின் கருத்துக்களையும் செய்தித்தாள்களில் வெளிவந்ததைக் கண்டோம். மொழியின் அடிப்படையில்தான் ஆந்திர மாநிலப் பிரிவினை யும் ஏற்பட்டது : பம்பாய் மாநிலமும் இரண்டாகப் பிரிந்தது.

இலக்கிய நயங்கண்டு இன்புறல் தமிழ்மொழியில் எண்ணற்ற இலக்கியங்கள் இருக்கின்றன; நமது மூதாதையர் நமக்கு குடிவழிச் சொத்தாக வைத்துவிட்டுச் சென்ற அறிவுக் கருவூலங்கள் அவை. இளமையிலிருந்தே மாளுக்கர்களே இலக்கிய நயமுணர்ந்து சுவைத்தலில் ஈடு