பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛份令一 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

ஆய்வுரை

நூற்பா கடு.

இது வாகைத்திணையின் இலக்கணம் உணர்த்துகின்றது.

(இ ள்) வாகைத்திணைதான் பாலை என்னும் அகத்திணைக் குப் புறனாகும். அஃதாவது உலகமக்கள் அனைவரும் குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்கு உரிய அறிவு, ஆண்மை, பெருமை பற்றிய கூறுபாடுகளை ஏனையோரினும் மிகுத்து மேம்படுத லாகும். எ-று.

பாலை என்னும் அகத்திணை தனக்கெனத் தனிநிலம் பெறாது எல்லா நிலங்களிலும் காலம் பற்றிப் பிறப்பது போன்றே, வாகைத்திணையாகிய இதுவும் தனக்கெனத் தனிநிலம் பெறாது எல்லா நிலத்தினும் எல்லாக்குலத்தினுங் காலம் பற்றி நிகழ்த லானும், மனைவாழ்க்கையில் ஒத்தார் இருவர் புகழ்ச்சி காரண மாகப் பிரியுமாறு போலவே சமுதாய வாழ்வில் தன்னோடு ஒத்தா ரினின்றும் மேற்பட்டுப் பிரிந்து புகழப்படுதலானும் பாலைக்கு வாகை புறனாயிற்று என விளக்கந்தருவர் உரையாசிரியர்.

மக்கட்குலத்தார் தத்தமக்குரிய கல்வி தறுகண் முதலாகச் சொல்லப்பட்ட பல துறைகளிலும் ஒப்புடைய பிறரோடு உறழ்ந்து மேம்படுதலும், தமக்குரிய துறையில் எதிர்ப்பு எதுவுமின்றி இயல் பாகவே மேம்பட்டு விளங்குதலும் ஆகிய இருதிறமும் வாகைத் திணையெனவே கொள்ளப்படும். இவற்றுள் ஒத்தார் பிறரோடு உறழ்ச்சி வகையாற் பெற்ற வென்றியை வாகை எனவும், பிறருடன் உறழ்தலின்றித் தம்மியல்பாற் பெற்ற வென்றியை முல்லையெனவும் வேறுபடுத்து வழங்குதல் பிற்கால வழக்காகும்.

தாஇல் கொள்கை-குற்றம் இல்லாத கோட்பாடு; உலகில் வாழ்வார் பிறர்க்கு எத்தகைய துன்பமும் விளைத்தலின்றி அனை வர்க்கும் நலமே விளைக்கும் உயர்ந்த கொள்கை என்பதாம். இத்தம் கூறாவன அறிவு ஆண்மை பெருமை பற்றிய தத்தம் ஆற்றற்கூறுபாடுகளுக்கு ஏற்பத் தாம் மேற்கொள்ளும் செயல் வகைகள், பாகுபட மிகுதிப் படுத்தலாவது, உலகத்தார் பலவகை யானும் ஏனையோர் செயல்களோடும் ஒப்புநோக்கி அவற்றின் மிக்கனவாகப் பாராட்டும் வண்ணம் தத்தம் திறத்தினை மேன் மேலும் மிகுத்து மேம்படுதல்.

"தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார் மனனேர் பெழுதரு வானிற முகனே'