பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0க தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

எனவரும் தொல்காப்பிய நூற்பாவின் துறையமைப்பினை அடியொற்றியதாகும்.

‘பனியும் வெயிலுங் கூதிரும் யாவும் துணியில் கொள்கையொடு நோன்மையெய்தித் தணிவுற்றிருந்த கணிவன் முல்லை:

எனவரும் பன்னிருபடலச் சூத்திரத்தில் கணிவன் முல்லையின் இலக்கணம் கூறப்படுகின்றதேயன்றி அறிவன்வாகையைப் பற்றிய குறிப்பு இடம்பெறாமையும் இங்குக் கருதத்தகுவதாகும். வாகைத்திணையின் எழுவகையுள் இறுதியிற் கூறப்பட்ட அனை நிலை வகை என்பது, அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் முதல் பாலறி மரபிற்பொருநர் என்பது ஈறாக முற்கூறிய ஆறுவகை களிலும் அடங்காத எஞ்சிய பலவகைவென்றியையும் உள்ளடக்கிய தனித்தொகுப்பாகும்.

தாபதப்பக்கமாவன தவஞ்செய்வார்க்குரிய செயல் முறைகள். பாகுபாடு அறிந்த மரபினையுடைய பொருநர் என்றது, வில்,

வேல், வாள் முதலிய படைக் கருவிகளாலும் மெய்யின் மொய்ம்பி னாலும் பகைவரொடு பொருது மேம்படுதலில் வல்ல வீரர்களை.

பார்ப்பனப்பக்கம் முதல், பாலறி மரபிற்பொருநர் ஈறாகக் கூறிய அறுவகையுள் அடங்காது, அவைபோன்று எஞ்சியுள்ள தொழிற்றிறங்களில் தத்தங்கூறுபாட்டினை மிகுவித்து மேம்படுத லாகிய வாகைச் செய்திகள் யாவும் அனைநிலை வகை என வாகைத்திணையின் ஏழாவது வகையாக முன்னோர்களால் அடக்கியுரைக்கப்பட்டன என்பார். அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையின் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்' என்றார். பெரும்பகை' என்றது புறப்பகையை எனவும் அரும் பகை' என்றது அகப்பகையை எனவும் கொள்ளுதல் ஏற்புடைய தாகும். குற்றமே காக்க பொருளாகக் குற்றமே, அற்றத் தரூஉம் பகை' (சாடச) எனவரும் திருக்குறள் இக்கருத்துக்கு அரண் செய்தல் அறியத் தகுவதாகும்.

17. கூதிர் வேனில் என்றிரு பாசறைக்

காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும் ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் ஒன்றிய மரபிற் பின்தேர்க் குடிவையும்