பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கசு க. அடு

'நளிகட லிருங்குட்டத்து’ என்னும் (உசு) புறப்பாட்டினுள், அந்தணன் வேட்பித்தலும் அரசன் வேட்டலும் வந்தது.

'இலனென்னு மெல்வ முரையாமை வீதல்

குலனுடையான் கண்ணே யுள.' (குறள்-ஈகை-E) இஃது ஈதல்,

'ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை

வைத்திழக்கும் வன்க ண வர்.' )@g poir -FF ةn 5- ےg(

இஃது ஈதற் சிறப்பு.

'நிலம்பொறை யாற்றா நீதிபல கொண்டுங் குலம்பெறு தீங் கந்தணர் கொள்ளார்-நலங்கிளர் தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறுபோற் றாவா தொளிசிறந்த தாம்.'

(பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு-குடிமரபு) இஃது ஏற்றல்,

'தான் சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்.' (நாலடி-ச அ) இஃது ஏற்றற் சிறப்பு. ஒதுவித்தலும் வேட்பித்தலும் ஏற்றலும் அந்தணர்க்கே உரிய.

ஐவகை மரபின் அரசர் பக்கமும்-ஒதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டஞ்செய்தல் என்னும் ஐவகையிலக்கணத்தை யுடைய அரசியற் கூறும்.

வகையென்றதனான் முற்கூறிய மூன்றும் பொதுவும், பிற் கூறிய இரண்டுஞ் சிறப்புமாதல் கொள்க.

பார்ப்பார்க்குரியவாக விதந்த வேள்வியொழிந்த வேள்வி களுள் இராசசூயமுந் துரங்க வேள்வியும் போல்வன் அரசர்க்குரிய வேள்வியாம். கலிங்கங் கழுத்து யாத்துக் குளம்புங் கோடும் பொன்னணிந்த புனிற்றாநிரையுங், கனகமும் கமுகு முதலியனவும் அன்னமும் செறிந்த படப்பை சூழ்ந்த மனையுந் தண்ணடையுங், கன்னியரும், பிறவுங்கொடுத்தலும் மழுவாணெடியோனொப்பன் உலகு முதலியன கொடுத்தலும் போல் வன அவர்க்குரிய ஈதலாம். படைக்கலங்களாலும் நாற்படையானுங் கொடைத் தொழி லானும் பிறவாற்றானும் அறத்தின் வழாமற் காத்தல் அவர்க் குரிய காப்பாம். அங்ங்னங் காக்கப்படும் உயிர்க்கு ஏதஞ்செய்யும்