பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

胚-历_G தொல்காப்பியம்-பொருளதிகாரம் - உரைவளம்

பொருள் :- (8) வாயுறை வாழ்த்தும் செவியறிவுறுTஉவும் ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்-வாயுறை வாழ்த்து, செவியறிவுறுTஉ, அவற்றுடன் ஒருங்கெண்ணப்பட்டு வரும் புற நிலை வாழ்த்து, எனும் 'வாழ்த்தியல் வகை மூன்றும். கைக் கிளை வகையோடுளப்படத் தொகைஇத் தொக்க நான்கும்(புரைதீர் செந்திறக்) கைக்கிளை வகையாய்ப் பாடானா வணவோடுஞ் சேரக்கூட்டி, முன்னேழும்போற்றணிநிலையின்றி இனம்தொக்கு வரும் தொகைப் பரிசாலொத்த இந்நான்கும்; உள என மொழிப-முன்னேழோடும் சேர்த்தெட்டாவதுபாடாண் வகையாய் எண்ணுதற்குள்ளன என்பர் புறநூற் புலவர்.

குறிப்பு :- இந்நூற்பாவில் வரும் உம்மைகள் எல்லாம் எண் குறிப்பன. செய்யுளியலில் புறநிலை, வாயுறை, செவியறிறுஉ எனத் திறநிலை மூன்றும் சேர்த்தெண்ணப் பெறுவதையும், "கைக்கிளைச் செய்யுள், செவியறி, வாயுறை புறநிலை, என்றிவை தொகுநிலை” என்றொரு பரிசாய்ச்சேர்ந்து வருவதையும் செய் புளியலிற் கண்டு தெளிக. இந்நான்கும் ஒருங்கே தொகுநிலைகளா வதானும், ஒரு பரிசாய்ப் பாடாணாதற்குரியவையாதலானும், அவற்றை ஒருங்கே கூட்டி எட்டாவது வகையாயிதிலெண்ணப் பட்டன. இதற்குமாறாயிவற்றைப் பிரித்துத் தனித்தனியே நான் காக்கி, ஏத்தலையும் பழித்தலையும் ஒன்றாக்கி, 'முன்கூறிய ஆறனோடேபத்தாய்ப் பாடாண் திணைக்குரிய துறைகள் உள' என்பர் நச்சினார்க்கினியர். பாடாண் துறைகள் இதற்கடுத்த நூற் பாவில் கூறப்பெறுவதாலும் மற்றப் புறத்தினைகளுக்குரிய துறை களையெல்லாம் சேர்த்தொவ்வொரு நூற்பாவிலமைப்பதும்: வெட்சி, உழிஞை போன்ற சில திணைகளின் சிறப்புவகைகளை மட்டும் வேறொரு சூத்திரமாக்குவதும் தொல்காப்பியர் கொண்டாளு முறையாதலாலும், இதில் கூறுபவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளன்றித் துறைகளாகாமை தெளிவா கும். இன்னும், பாடாண் நாடுங்காலை நாலிரண்டு (சிறப்பு வகை)யுடைத் தென முன்னே எண் கொடுத்துத் தெளியக் கூறிய தாலும், இங்கு முதலில் ஏழைத் தனித்தனி எண்ணிவிட்டு இறுதியிலொருபரிசான இந்நான்கை ‘உளப்படத் தொகைஇத் தொக்க நான்கும் உள' எனப் பிரித்து வேறு கூறியதாலும், இது பாடானின் சிறப்பு வகை எட்டையே சுட்டுவது தேற்றமாகும். ஏத்தலும் பழித்தலும் வெவ்வேறு பரிசுடைமைமேற்காட்டிய சான்றோர் செய்யுட்களாலறிவதாலும் அது பொருந்தாமை தெளிவாகும். இன்னும் முன் 'நாலிரண்டுடைத்து' என்பதைத்