பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

版_O母叶 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

மகனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும்.' *

உதாரணம் 'பூங்கண் நெடுமுடிப் பூவைப்பூ மேனியான் பாம்புண் பறவைக் கொடிபோல-ஓங்குக பல்யானை மன்னர் பணியப் பணிமலர்த்தார்க் கொல் யானை மன்னன் கொடி" (புறப். பாடான், க.க)

இது கொடிநிலை.

'அன்றெறிந் தானும் இவனால் அசண் வலித்து இன்றிவன் மாறாய் எதிர்வார்யார்-கன்றும் அடையார் மணிப்பூண் அடையாதார் மார்பின் கடஏாழி நின்றெரியச் சோ’’ (புறப். உழிஞை. எ) இது கந்தழி.

வள்ளியிற் சார்ந்து வருமாறு வந்தவழிக் கண்டுகொள்க. 'வந்தது கொண்டு வாராத துணர்த்தல்' (தொல். மரபி. ககo) என்பதனால் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்தி வருமெனவும் கொள்க. முருகாற்றுப்படையுள்,

'மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி' (திருமுருகு, எக.எங்.) என்றவழி, ஒரு முகத்தாற் பாண்டியனையும் இதனுட்சார்த்திய வாறு காண்க

1. வடு-குற்றம். முதலன-முதலாகச் சொல்லப்பட்டவை. கண் ணிய

வரும்- பொருந்தியனவாய்வரும். கொடிநிலை கந்தழி’ என்பவற்றிற்குப் புறப் பொருள் வெண்பாமாலையிலிருந்து எடுத்துக்காட்டுத் தந்த இளம்பூரணர், வள்ளி என்னும் இத்துறைக்கு,

வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமியதே

ஈண்டியம் விம்ம இன வளையார்-பூண் தயங்கச்

சூலமோ .ாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு

வேலனோ டாடும் நெறி. (பு. வெ. மா. பாடாண். சக) என்ற வெண்பாவையும் உதாரணமாகக் காட்டியிருக்கலாம். இதனையெடுத்துக் காட்டாது வள்ளியிற்கூர்ந்து வருமாறு வந்த வழிக் கண்டு கொள்க’ என எழுதிய தற்குரிய காரணம், இவ்வெண்பாவில் கடவுளை வாழ்த்தும் பகுதியன்றி அதனொடு சார்ந்து வரும் புறத்தினைப்பகுதி யில்லாமையேயென எண்ண வேண்டியுளது.

2. வந்தது. கொண்டு வாராதது முடித்தலாவது, ஒருங்கு தொகுத்தெண்ணப்

பட்ட பொருட்டொகுதியைப் பகுத்துக் கூறியவழி, வாராத தன் கண்ணும் அவ் விலக்கணத்தைச் சேர்த்து முடித்தல். 'அமரர்கண் முடியும் அறுவகையானும்: என்ற தொகுப்பில் முதற்கண்ண வாகிய கொடி நிலை கந்தழி வள்ளி என்ற மூன்றும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் என இந் நூற்பாவிற் கூறப்பட்ட இலக்கணத்தை இம்மூன்றுடன் சேர்த்தெண் ணப்பட்ட புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்னும் ஏனை மூன்றற்கும் சேர்த்துப் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்தி வரு