பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் j45 முடிவில் எதிர்ப்பட்ட பிரம்மனிடம் தாங்கள் சிரஞ்சீவியாக இருக்க வரம் வேண்டினர். அப்படி ஒரு வரத்தைத் தர தனக்கு ஆற்றலில்லை என்று பிரம்மன் கூறியவுடன், அப்படியானால் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று பெரிய கோட்டைகளை அமைத்துக்கொண்டு தாங்கள் ஆயிரம் வருடங்கள் அவற்றுள் வாழ வேண்டும் என்றும், அதன்பின் இந்த மூன்று கோட்டைகளும் ஒரே கோட்டையில் அடங்கி பலம் பெற்றதாக இருக்கவேண்டும் என்றும் கேட்டனர். மேலும் யாராவது தன்னை அழிக்க வந்தால் ஒரே அம்பை மட்டும் பயன்படுத்தி ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் இந்த மூன்று கோட்டைகளை அழித்தால் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினர். பிரம்மன் தந்த வரத்தின்படி மூன்று கோட்டைகளை அமைத்து ஆயிரக்கணக்கான தைத்தியர்கள் அவற்றுள் வாழ வழிசெய்தனர். பல்லாண்டுகள் கழித்தவுடன் அவர்கள் சிவபூசை செய்வதை மறந்து அகங்காரம் மிக்கவர்களாக தங்களை யாரும் அழிக்க முடியாது என்ற காரணத்தால் தவறான வழிகளில் செல்ல முற்பட்டனர். தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகிய அனைவரும் சிவனிடம் சென்று முறை யிட்டனர். கடவுள் வழிபாட்டை மறந்து தவறான வழிகளில் செல்லும் அவர்களை அழிக்க சிவன் ஒத்துக்கொண்டார். விஸ்வகர்மா முழுதும் தங்கத்தால் ஆன தேரைத் தயாரித்தான். பிரம்மனே சாரதியாக இருந்து தேரை இயக்க முன்வந்தான். திரிபுரத்தை நோக்கிச் சென்ற அத்தேரிலிருந்து பாசுபதம்’ என்ற ஒரே அஸ்திரத்தை செலுத்தவே திரிபுரம் எரிந்து சாம்பலாயிற்று. சிவன் ஏற்காத சம்பங்கிப் பூ லோமஹர்ஷ்ன முனிவர் உடனிருந்த முனிவர்களுக்குச் சிவ புராணத்தைச் சொல்லிக்கொண்டு வருகையில், “சிவ ւ.ւկ.-10