பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பதினெண் புராணங்கள் மலைகளுக்குள் ஒடிவிடுவர். உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி வருந்துவர். தர்மம் அழிக்கப்படும். மறுபடியும் விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார். இதன்பிறகு மறுபடியும் தருமம் நிலை நிறுத்தப்படும். கலியுகம் மூன்றுலட்சத்து அறுபது ஆண்டுகள் நீடிக்கும். தேவக அரசனின் மகளாகிய தேவகியை மணந்தார், வசுதேவர். இவர்களை ஏற்றிக் கொண்டு ரதத்தை செலுத்தினான் கம்ஸன். அப்பொழுது வானில் அசரீரி, 'முட்டாள் கம்ஸனே! யாரை நீ ரதத்தில் ஏற்றிச் செல்லு கிறாயோ அவளுடைய எட்டாவது மகனே உன்னைக் கொல்லுவான் என்றது. இதைக்கேட்ட கம்ஸன் வாளை எடுத்து தேவகியைக் கொல்லப் போனான். உடனே வசுதேவர் அவனைத் தடுத்து அவளுக்குப் பிறக்கும் எல்லா குழந்தை களையும் அவனிடம் ஒப்படைப்பதாகக் கூறினார். சுமேரு மலையிலுள்ள தேவதைகளிடம் பிருத்வி ஆகிய பூமி சென்று தைத்தியர்களின் கொடுமை தாங்கவில்லை. முன்னொரு காலத்தில் விஷ்ணு கலாநேமி என்ற அசுரனைக் கொன்றார். அந்தக் கொடியவன் இப்பொழுது உக்கிர சேனனின் மகனாகிய கம்ஸனாகப் பிறந்துள்ளான். கொடிய ஏனைய தைத்தியர்களாகிய அரிஷ்டா, தேனுகா, கேசி, நரகா, சுந்தா ஆகியவர்களோடு சேர்ந்து கம்ஸன் செய்யும் கொடுமைகள் பொறுக்கக் கூடியதாக இல்லை என்று முறையிட்டது. - இவர்கள் கூறியதை உண்மை என்று பிரம்மாவும் கூறினான். எல்லா தேவதைகளும் சேர்ந்து வடக்கே உள்ள கடற்கரைக்குச் சென்று விஷ்ணுவை வேண்டிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். உலகத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்த பொழுதெல்லாம்