பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 பதினெண் புராணங்கள் அவற்றில் ஒன்றை ராதைக்கும் ஒன்றை நாராயணனுக்கும் கொடுத்துவிட்டு, மூன்றைத் தானே இருத்திக்கொண்டார். செல்வத்தின் அதிபதியான குபேரன் கிருஷ்ணன் உடலில் இருந்து வெளிப்பட்டு, தானே மனோரமா என்ற பெண்ணை உண்டாக்கி அவளை மணம் செய்து கொண்டான். கிருஷ்ணன் உடம்பில் இருந்து, குபேரன் பணியாளர்கள், சிவன் பணியாளர்கள், நாராயணன் பணியாளர்கள் வெளிப்பட்டனர். லட்சுமியும், சரஸ்வதியும் திருமாலை மணந்து கொண்டனர். ரேஸ்வதி தாராயணனை மணந்து கொண்டார் என்ற இந்த விநோதமான செய்தி இந்தப் புராணத்திற்கே உரியது, பிரம்மன் சாவித்ரியையும், ரதி மன்மதனையும், மனோரமா குபேரனையும் மணந்தனர். துர்க்கையை மணந்து கொள்ளுமாறு சிவனை வேண்ட, அவர் தாம் துறவியாக இருக்க விரும்புவதாகவும், தமக்குத் திருமணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். இதை ஒப்புக் கொண்ட கிருஷ்ணன் ஒருகோடி கல்பங்களுக்குப் பிறகு சிவன் துறவியாக இருந்து விட்டுப் பிறகு துர்க்கையை மணந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இப்பொழுது பிரம்மனுக்கு அழகிய மாலை ஒன்றைக் கொடுத்து, ஆயிரம் தேவ வருஷங்கள் தவம் செய்ய வேண்டும்- அதன் பிறகு படைத்தல் தொழிலைச் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு, கோபிகைகளை அழைத்துக் கொண்டு பிருந்தாவனம் போய்விட்டார். கிருஷ்ணன் கூறிச் சென்றது போல், பிரம்மன், மது, கைடபர்களின் கொழுப்பினை எடுத்து உலகைப் படைத்தார். அடுத்து மலைகளையும், எட்டு முக்கியமான மலைகளையும் படைத்தார். அவை சுமேரு கைலாசம், மாலயா, இமயமலை, உதயசலா, அஷ்டசலா, சுபேலா, கந்தமாதனா என்பனவாகும். எண்ணற்ற ஆறுகளையும் கிராமங்களையும் படைத்தார். முதன்மை வாய்ந்த சமுத்திரங்களான லவண, இக்ஷி, சுரா,