பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 525 கெளதமர், கோதாவரி கங்கையைத் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்திருப்பதை அறிந்த சப்தரிஷிகள் அதைக் காண ஆசிரமம் வந்தனர். சப்தரிஷிகளின் முன்னிலையில், தன்னை ஏமாற்றிய முனிவர்கட்குச் சாபமிட்டார் கெளதம முனிவர். "இனி நீங்கள் பிராமணர்கள் என்று யாராலும் கருதப்பெற மாட்டீர்கள். எந்த யாகம் செய்வதற்கும் அனுமதிக்கப்பெற மாட்டீர்கள்” என்று சாபமிட்டார். இதைக் கேட்ட முனிவர்கள் அவரது சாபத்தின் கடுமையைக் குறைத்துக் கொள்ள வேண்டினர். ஆனால் கெளதம முனிவர், சிவபெருமான் ஒருவராலேயே அதனைச் செய்ய முடியும் என்று கூறி அனுப்பி விட்டார். கைலாய மலைக்குச் சென்று சிவனிடம் சாபத்தின் கடுமை குறைக்க வேண்டினர். சிவனும் அவர்கள் வேண்டு கோளுக்கிணங்க, துர்குணம் கொண்ட அம்முனிவர்கள், கலியுகத்தில் பிறப்பார்கள் என்றும், பொய் பேசுதல், ஏமாற்றுதல் போன்ற குணங்களை உடையவர்களாய் இருப்பர் என்றும் கூறினார். அம்முனிவர்கள் கலியுகம் என்பது மிகக் கொடுமை யானதாக இருக்கும் என்றும், தங்களால் அதைத் தாங்க இயலாது என்றும் கூறினர். சிவபெருமான் அவர்களிடம், சிவ சம்ஹிதை என்ற நூலினைக் கொடுத்து, அவர்களில் சிலர் நல்லவர்களாகப் பிறப்பார்கள் என்றும், சிலர் துன்மார்க்கர் களாய்ப் பிறந்து நரகத்தினை அடைவார்கள் என்றும் கூறினார். இதுவே சாபத்தின் காரணமாகக் கலியுகம் தோன்றும் என்பதற்கான கதை என்று முடித்தனர். அகஸ்திய முனிவரும், பத்ரஷ்வ அரசனும். விஷ்ணுவே அனைத்திலும் உயர்ந்தவர் பிரம்ம சிவபெருமான் இவர்களை விட உயர்ந்து நிற்பவர் விஷ்ணுவே. சத்துவ குணம் மட்டுமே நிறைந்திருப்பவர் விஷ்ணு. சத்துவகுணமும், ராஜசகுணமும் இணைந்து