பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 பதினெண் புராணங்கள் கொண்டிருந்த பிரம்மனுடைய தலை கையிலிருந்து கீழே விழுந்த இடம் காசி ஆதலால், அந்த இடத்தைத் தமக்குப் பிடித்த இடமாக வைத்துக் கொண்டார். - காசியின் எல்லைக்குள் நுழைந்த உடனேயே ஒருவருடைய பூர்வ ஜென்ம பாவங்கள் அழிந்துவிடுகின்றன. காசியில் இறப்பவர்கள் நேரே சிவலோகம் செல்கின்றார்கள். மக்களில் நால்வகை வருணத்தாரும் விலங்குகளும் கூட, காசியில் இறந்தால் நேராக சிவலோகம் செல்கின்றன. ஒருமுறை கைலாசத்தில் சனகர் முதலிய முனிவர்கள் ஸ்கந்தனைப் பார்த்து காசியின் பெருமையைச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். காசியிலுள்ள எல்லா இடங்களும் ஒரு கோயிலையும் அதன் தொடர்பான பொருள்களையும் பெற்றிருப்பதால் எல்லா இடங்களுமே புண்ணியமானவை என்று கூறினர். காசியில் உள்ள சுடுகாட்டின் மேல் ஆகாயத்தில் சிவனுடைய கோயில் ஒன்று இருக்கிறது. சாதாரண மக்களின் கண்களுக்கு அது புலப்படாவிட்டாலும் மகான்களுக்கும் ஞானிகளுக்கும் பரமாத்மாக்களுக்கும் அது கண்ணில் படும். காசியில் வாழ்வதற்கும் நுழைவதற்கும் சில கட்டுத் திட்டங்கள் உண்டு. வேதவியாசர் கூட நினைத்த போதெல்லாம் காசியில் வாழ முடியாது. சுக்கிலபட்சத்தில் எட்டு, பதினாலு ஆகிய திதிகளில் மட்டுமே அவர் காசிக்குள் வரலாம் என்ற நியதி இருந்தது. வேதவியாசர் ஒருமுறை இந்த நியதியை மீறி ஆறு மாதம் காசியில் தங்கிவிட்டார். அந்த ஆறு மாதங்களும் காசியில் உள்ளவர்கள் ஒருவர்கூடப் பிச்சை போட முன் வரவில்லை.