பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 631 பொழுது பிரம்மா பொன் முட்டையிலிருந்துதான் தோன்றினார். அதன் பிறகு ஒவ்வொரு கல்பத்திலும் ஒரு பிரளயம் ஏற்படும். அதில் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவரைத் தவிர மற்றவர்கள் இறந்து போவார்கள். அதன் பிறகு மறுபடியும் பிரபஞ்ச உற்பத்தி நடைபெறும். கடைசி கல்பத்தின் முடிவில் எங்கும் நீரே நிறைந்திருக்கும். சொர்க்க லோகம், பூலோகம், பாதாளலோகம் ஆகிய அனைத்தும் நீரால் மூடப்பட்டிருக்கும். தேவர்கள், முனிவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்பொழுது ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கைகள், ஆயிரம் கால்களுடன் விஷ்ணு மட்டுமே அனந்தன் என்னும் பாம்பின் மேல் படுத்திருப்பார். நீரில் படுத்துறங்கும் விஷ்ணுவின் கொப்பூழினின்று சூரியனை ஒத்த ஒளியுடைய ஒரு பெரிய தாமரை மலர் தோன்றிற்று. அதன் மணம் எல்லாத் திசைகளுக்கும் பரவிற்று. அம் மலரிலிருந்து பிரம்மா தோன்றினார். அவ்வாறு தோன்றிய பிரம்மன், விஷ்ணுவைப் பார்த்து “நீ யார்?' என்று கேட்டார். விஷ்ணுவும் “நான்தான் விஷ்ணு. அனைத்திற்கும் மூலப்பொருள் நானே” என்று விடை அளித்தார். பிரம்மனை நோக்கி, “நீ யார்?' என்று கேட்டார். பிரம்மன் "நானே படைத்தல் தொழில் செய்பவன். இப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் என் உடம்பில் உள்ளன” என்று கூற, விஷ்ணுவும் "அப்படியா! எங்கே பார்க்கலாம்” என்று கூறி, பிரம்மாவின் உடலில் புகுந்தார். அங்கு மூன்று உலகங்கள் தேவர்கள், அசுரர்கள் மக்கள் ஆக அனைத்தையும் பிரம்மன் வயிற்றில் கண்ட விஷ்ணு, பிரம்மன் வாய் வழியே வந்து, "என் உடம்பினுள்ளும் இவைகளைக் காணலாம், நீ வந்து பார்” என்று அழைக்க பிரம்மனும் அவ்வாறே செய்தார். உள்ளே சென்ற பிரம்மன், விஷ்ணுவின் வயிற்றில் அண்ட சராசரங்களைக் கண்ட போதிலும், வெளியே