பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 545 புரிந்தார். சிவனும் பார்வதியும் கார்த்திகேயன் இருந்த இடத்தை நெருங்கினர். பல வாத்திய கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். குழந்தையைப் பார்வதி எடுத்து அணைத்துக் கொண்டாள். பிறகு சிவனும் எடுத்து அணைத்துக் கொண்டார். குழந்தையை அணைத்துக் கொண்டே சிவன், இந்தக் குமரன் என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு என்று கேட்டார். தேவர்கள் குமரனை எங்கள் படைத்தலைவனாக ஆக்குங்கள் என்று வேண்டிக் கொண்டனர். அந்த நேரத்தில் பிரம்மனுடைய ஆணையின்படி மிருத்யுவின் மகனாகிய சேனா என்பவள் அங்கே வந்து சேர்ந்தாள். அப்பொழுது தேவர்கள் சிவனைப் பார்த்து இந்தப் பெண் குமரனைக் கணவனாக அடைய வேண்டும் என்று பலகாலம் தவம் செய்தாள் என்று கூறினர். இதனைச் சிவன் ஏற்றுக் கொள்ள, உடனே சேனாவைக் குமரனுக்கு மணமுடித்தனர். சேனாவை மணந்ததால் சேனா வுக்குத் தலைவன் என்ற முறையில் சேனாபதி என்ற பெயர் குமரனுக்கு ஏற்பட்டது. இந்த நேரத்தில் கார்த்திகைப் பெண்கள், கார்க முனிவர், பார்வதி ஆகிய மூவரிடையே குழந்தை யாருடையது என்பதில் பெரிய கலகம் விளையத் தொடங்கியது. அங்கே வந்த நாரதர் சிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த இக் குழந்தை பெரிய அசுரனை அழிப்பதற்காக என்றே சிறப்பாகக் கூறப்பட்டதாகும். ஆகவே நீங்கள் உரிமை கொண்டாட வேண்டாம் என்று கார்த்திகைப் பெண்களை அடக்கினார். குமரன் உடனே கார்த்திகைப் பெண்களைப் பார்த்து நீங்கள் என்றும் கார்த்திகை நட்சத்திரத்தின் இடமாக ஆகாயத்தில் இருப்பீர்களாக என்று வரமளித்தார். இதற்கு அடுத்தபடியாக ஸ்கந்தபுராணத்தில் இதே கதை முற்றிலும் வேறுவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்தக் பயு-35